Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ravi Mohan : ரவி மோகன் – இயக்குநர் கார்த்திக் யோகியின் கூட்டணி.. சொந்த தயாரிப்பில் இறங்கிய ரவி மோகன்!

Ravi Mohan And Karthik Yogi : சமீப காலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் ரவி மோகன். இவர் புதிதாகத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார். இவரது நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ravi Mohan : ரவி மோகன் – இயக்குநர் கார்த்திக் யோகியின் கூட்டணி.. சொந்த தயாரிப்பில் இறங்கிய ரவி மோகன்!
ரவி மோகன் - கார்த்திக் யோகிImage Source: Instagram
barath-murugan
Barath Murugan | Updated On: 09 Jun 2025 15:16 PM

தமிழ் சினிமாவில் 2003ம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போதுவரை பல ஹிட் படங்களைக் கொடுத்து வருபவர் நடிகர் ரவி மோகன் (Ravi Mohan). ஜெயம் (Jayam) படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக நுழைந்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சினிமாவில் நடிப்பில் கவனம் செலுத்திவந்த ரவி மோகன் தற்போது திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் இறங்கியுள்ளார். இவர் புதிதாக “ரவி மோகன் ஸ்டூடியோஸ்” (Ravi Mohan Studios) என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார். தனது தயாரிப்பிலும் மற்றும் நடிப்பிலும் உருவாகும் முதல் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ரவி மோகனின் தயாரிப்பில் மற்றும் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி (Karthik Yogi) இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் அறிவிப்புகள் பற்றி இயக்குநர் கார்த்திக் யோகி தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். ரவி மோகன் மற்றும் கார்த்திக் யோகியின் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்குப் படக்குழு “ப்ரோகோட்” (Bro Code) என்று படக்குழு டைட்டிலை வைத்துள்ளது. தற்போது வெளியான அறிவிப்பு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரவி மோகனின் ப்ரோகோட் திரைப்பட குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

ரவி மோகன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் :

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ப்ரோகோட் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். தனது ரவி மோகன் ஸ்டூடியோஸின் தயாரிப்பில் உருவகம் முதல் படமாக இந்த ப்ரோகோட் படமானது உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரவி மோகனுடன், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் முக்கிய வேடத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மற்ற நடிகர்களினை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த கார்த்திக் யோகி :

இயக்குநர் கார்த்திக் யோகி ஆரம்பத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்தில் தான் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இயக்குநராக டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி என நடிகர் சந்தானத்தின் இரு படங்களை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தை அடுத்துத்தான் நடிக்கிற ரவி மோகனின் தயாரிப்பிலும், நடிப்பிலும் ப்ரோகோட் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படமானது மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி மோகனின் படங்கள் :

நடிகர் ரவி மோகன் ஏற்கனவே பராசக்தி, ஜீனி, கராத்தே பாபு மற்றும் தனி ஒருவன் 2 போன்ற படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் ஜீனி படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணியிலிருந்து வருகிறது. அடுத்ததாகக் கராத்தே பாபு படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும் சிவகார்த்திகேயனுடன் நடித்துவரும் பராசக்தி படத்தில் நெகட்டிவ் ரோலில் ரவி மோகன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 40 நாள் மட்டும் பாக்கியுள்ளது. மேலும் தனி ஒருவன் 2 படத்தின் ஷூட்டிங் இன்னும் ஆரம்பமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களைத் தொடர்ந்துதான் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் ப்ரோகோட் என்ற புதிய படத்தில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உணவு டெலிவரி சேவையை கண்டு அசந்த வெளிநாட்டவர்கள்!
இந்தியாவின் உணவு டெலிவரி சேவையை கண்டு அசந்த வெளிநாட்டவர்கள்!...
தனுஷின் குபேரா படத்தின் '3வது சிங்கிள்' எப்போது ரிலீஸ் தெரியுமா?
தனுஷின் குபேரா படத்தின் '3வது சிங்கிள்' எப்போது ரிலீஸ் தெரியுமா?...
WhatsApp ஸ்டோரேஜ் பிரச்னைக்கு தீர்வு: புதிய டவுன்லோடு குவாலிட்டி!
WhatsApp ஸ்டோரேஜ் பிரச்னைக்கு தீர்வு: புதிய டவுன்லோடு குவாலிட்டி!...
Repo Rate குறைந்தாலும் FD-க்கு 9.10 வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
Repo Rate குறைந்தாலும் FD-க்கு 9.10 வரை வட்டி வழங்கும் வங்கிகள்!...
தொண்டர்களுக்காக இதை செய்வேன்.. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு!
தொண்டர்களுக்காக இதை செய்வேன்.. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு!...
ஆர்யாவின் 36வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!
ஆர்யாவின் 36வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!...
இன்று சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது
இன்று சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது...
கார்த்தி - மாளவிகா மோகனனின் 'சர்தார் 2' ஷூட்டிங் நிறைவு!
கார்த்தி - மாளவிகா மோகனனின் 'சர்தார் 2' ஷூட்டிங் நிறைவு!...
சென்னை டூ சண்டிகர்! முக்கிய போட்டியின் இடத்தை மாற்றிய BCCI..!
சென்னை டூ சண்டிகர்! முக்கிய போட்டியின் இடத்தை மாற்றிய BCCI..!...
உங்களிடம் பல பிஎஃப் கணக்குகள் இருக்கா ? எப்படி இணைப்பது ?
உங்களிடம் பல பிஎஃப் கணக்குகள் இருக்கா ? எப்படி இணைப்பது ?...
விஜயை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளது யாரை தெரியுமா?
விஜயை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளது யாரை தெரியுமா?...