Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : சூர்யாவின் சிறுவயது ‘க்ரஷ் நடிகை’ யார் தெரியுமா? கார்த்தி சொன்ன உண்மை!

Suriya Childhood Crush Actress : தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் சூர்யா. தொடர் தோல்வி படங்கள் வந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் இவர். சூர்யாவின் சிறுவயது க்ரஷ் நடிகை யார் என்பதைப் பற்றி நடிகர் கார்த்தி கூறியிருந்தார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

Suriya : சூர்யாவின் சிறுவயது ‘க்ரஷ் நடிகை’ யார் தெரியுமா? கார்த்தி சொன்ன உண்மை!
நடிகர் சூர்யாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 10 Jun 2025 08:43 AM IST

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் (Suriya)  நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தில் சூர்யா அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடித்து அசத்தியிருந்தார். சுமார் 5 வருடங்களுக்குப் பின் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படமாக இந்த ரெட்ரோ படமானது இருந்தது. இந்த படத்தின் மூலம் நடிகர் சூர்யா மீண்டும் கம்பேக் கொடுத்தார். நடிகர் சூர்யா தனது தந்தை சிவகுமாரைப் போல நடிகராகவேண்டும் என சிறுவயதிலிருந்தே ஆசைப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து இயக்குநர் வசந்த் (Vasanth) இயக்கத்தில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் (Nerrukku Ner) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் நடிகர் தளபதி விஜயுடனும் இணைந்து நடித்திருந்தார்.

இப்படத்தின் வரவேற்பிற்குப் பின், இவர் முன்னணி நாயகனாக அறிமுகமான படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இந்த படத்தையும் இயக்குநர் வசந்த் இயக்க சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் வரவேற்பிற்குப் பின் சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட் கொடுக்க தொடங்கினார். இந்நிலையில், இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகிய ரெட்ரோ சுமார் ரூ. 232 கோடியை வசூல் செய்து சூர்யாவின் அதிக வசூல் படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் முன்னதாக தெலுங்கு நேர்காணல் ஒன்றில் சூர்யா கலந்துகொண்டார், அந்த நேர்காணலில் தெலுங்கு நடிகை நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்திருந்தார். அதில் அவர் சூர்யாவுடன் உங்களின் சிறுவயது க்ரஷ் யார் என்று கேட்டிருந்தார். அதற்கு சூர்யா கொடுத்த பதில் பற்றிப் பார்க்கலாம்.

சூர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

நடிகர் சூர்யாவின் க்ரஷ் நடிகை யார் ?

அந்த நேர்காணலில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, சூர்யாவிடம் உங்களின் க்ரஷ் அதாவது மிகவும் ரசித்த நடிகை யார் என்பதைப் பற்றி கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சூர்யாவும் வேண்டாம் சார், பின் குடும்பத்திற்குள் குழப்பம் வந்துவிடும் என்று நகைச்சுவையாகப் பேசியிருப்பார். அதைக் கேட்டும் விடாத நடிகர் பாலகிருஷ்ணா, சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டிருப்பார். மேலும் கார்த்தியிடம் நந்தமுரி பாலகிருஷ்ணா, சூர்யாவின் க்ரஷ் நடிகை யார் என்று கேட்டிருந்தார்.

அதற்கு கார்த்தி, அண்ணன் சூர்யாவிற்குச் சிறுவயதில் “சிக்கு புக்குச் சிக்கு புக்கு ரயிலே” என்ற பாடலில் வரும் நடிகை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த பாடலை போட்டால் டிவி முன் சென்று நிற்பார் என்று கூறியிருந்தார். உடனே நடிகர் பாலகிருஷ்ணா , அந்த பாடலில் வரும் நடிகை கௌதமியா சூர்யாவின் க்ரஷ் நடிகை என்று கேட்டிருந்தார். அதற்கு கார்த்தியும் ஆமாம் என்று போனில் பேசியிருந்தார். மேலும் நடிகர் சூர்யா வெட்கப்பட்டுக்கொண்டே , போனில் கார்த்தியை நகைச்சுவையாகத் திட்டியிருந்தார்.