Silambarasan : சிலம்பரசன் – வெற்றிமாறனின் கூட்டணி திரைப்படம்.. அட இந்த கதைக்களத்தில் உருவாகிறதா?
Silambarasan Vetrimaaran Collaboration : நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப். இப்படத்தைத் தொடர்ந்து மேலும் இயக்குநர் வெற்றிமாறனுடன் புதிய படத்தில் சிலம்பரசன் இணையவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அப்படத்தின் கதைக்களம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் ஆரம்பமாக உள்ளதாம்.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன் (Silambarasan). தனது சிறு வயதிலிருந்தே சினிமாவில் மக்களுக்கு நெருக்கமானவராகவே வளர்ந்து வந்தார். இதனால் வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் தனது ரசிகர்களாக தக்கவைத்திருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன்தான் (Kamal Haasan) கதை எழுதியுள்ளார். மேலும் அவர்தான் இப்படத்தில் மிக முக்கிய நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படமானது ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்துடன் உருவாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் STR49, 50 மற்றும் 51 என அடுத்தடுத்த படங்களைத் தனது கைவசம் வைத்திருந்தார்.
இந்த படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுடன் (Vetrimaaran) புதிய படத்தில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திலும் சிலம்பரசன் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
சிலம்பரசனின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணி படம் :
இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படமானது கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கம் கொடுத்திருந்தார். மேலும் இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசனுடன் வெற்றிமாறன் புதிய படத்தில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதைக்களமானது வட சென்னை பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தனுஷின் வடசென்னை படத்தின் கதைக்கு முன் நடிக்கும் கதையை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல்கள் என்று தெரியவில்லை. இது குறித்து நடிகர் சிலம்பரசனோ அல்லது இயக்குநர் வெற்றிமாறனோ எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த உண்மையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சிலம்பரசனின் கைவசம் உள்ள படங்கள்
நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் STR49 படத்தின் பூஜைகள் கடந்த 2025, மே தொடக்கத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் ED சோதனை நடைபெற்ற நிலையில், படத்தின் ஷூட்டிங் பாதியில் நிற்கிறது. இதை தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் STR50 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் STR51 படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது. இந்த படங்களுக்கெல்லாம் முன், இயக்குநர் வெற்றிமாறனின் கூட்டணியில் படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.