Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bigg Boss Season 9: பிரபல இயக்குநர் முதல் சீரியல் நடிகை வரை.. இணையத்தில் கசிந்த பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்!

Bigg Boss Season 9 contestants: மக்களிடையே மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 8 சீசன்கள் தமிழில் வெளியான நிலையில், பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இதில் பங்குபெறும் போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த போட்டியாளர்கள் யார் என்பது பற்றி பார்க்கலாம்.

Bigg Boss Season 9: பிரபல இயக்குநர் முதல் சீரியல் நடிகை வரை.. இணையத்தில் கசிந்த பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Oct 2025 17:02 PM IST

ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல், 23 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருப்பார்கள். இவர்களுக்கிடையே ஏற்படும், சண்டைகள் மற்றும் போட்டிகள்தான் இந்த நிகழ்ச்சியாகும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவில் ஆரம்பத்தில் இந்தி மொழியில் வெளியான நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டுவருகிறது. தமிழில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆரம்பமான நிலையில், தற்போதுவரை ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், இந்த 2025ம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9) தமிழ் நிகழ்ச்சியானது தொடங்கவுள்ளது. விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், நாளை 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இன்று 2025 அக்டோபர் 4ம் தேதியில் நடைபெற்றநிலையில், நிகழ்ச்சியின் உள்ளே நுழைந்திருக்கும் போட்டியாளர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த போட்டியில் ரட்சகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி போட்டியாளராக பங்கேற்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் சிலரின் லிஸ்ட்டும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சிரஞ்சீவி – நயன்தாரா படத்தில் வில்லனாகும் பிரலப மலையாள நடிகர்?

இணையத்தில் கசிந்த பிக் பாஸ் சீசன் 9ல் நுழைந்த போட்டியாளர்கள் லிஸ்ட் :

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மற்றும் பல்வேறு நபர்கள் கலந்துகொள்வதாக கூறப்பட்டநிலையில், இணையத்தில் சில போட்டியாளர்களின் லிஸ்ட் காசித்துள்ளது.

இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பரான அப்டேட் இதோ

அதன்படி, பிக் பாஸ் 9ல் இயக்குநர் பிரவீன் காந்தி, விஜே.பார்வதி, பாக்கியலட்சுமி புகழ் நடிகை நேஹா, சீரியல் நடிகை ஆதிரை சௌந்தர்யா, நடிகை ஜனனி, இன்ஸ்டாகிராம் பிரபலம் ரம்யா ஜோ உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் நாளை 2025 அக்டோபர் 5ம் தேதியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் குறித்து வெளியான புது ப்ரோமோ வீடியோ :

இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது, மற்ற சீசன்களை ஒப்பிடும்போது, முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில், கிட்டத்தட்ட 23 அல்லது 24 போட்டியாளர்கள் பங்குபெறுவார்கள் என கூறப்படுகிறது.

கடந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளையே எலிமினேஷன் நடந்து சாச்சனா வெளியேறினார். அதுபோல், இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழிலும் வித்தியாசமான போட்டிகளுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.