ரொமாண்டிக் காமெடி வெப் சீரிஸ் பாக்கனுமா நீங்க? அமேசான்ல இருக்க இந்த When I Fly Towards You மிஸ் செய்யாதீர்கள்
When I Fly Towards You : ஓடிடி கலாச்சாரம் வளர்ந்த பிறகு மக்களிடையே மற்ற மொழியில் உருவாகும் படைப்புகளை பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. மற்ற மொழிகளில் உருவாகியுள்ள படங்கள் மட்டும் இன்றி இணையதள தொடர்களைப் பார்ப்பதிலும் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஓடிடி கலாச்சாரம் இந்திய மக்களிடையே அதிகரித்ததில் இருந்து மற்ற மொழிப் படங்கள் மற்றும் இணையதள தொடர்களை தொடர்ந்து இந்திய மக்கள் அதிகமாக பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் ரசிகர்களிடையே குறிப்பாக ஜென்சி கிட்ஸ்களிடையே கே ட்ராமா என்று அழைக்கப்படும் கொரியன் வெப் சீரிஸ்கள் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மிகவும் பிரபலமான சில வெப் சீரிஸ்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும். அப்படி இல்லை என்றால் கொரியன் மொழியில் உள்ள வெப் சீரிஸ்களை சப் டைட்டில் உதவியுடனும் நமது மக்கள் பார்த்து ரசித்து வருகின்றது. இந்திய மக்கள் அதிக அளவில் கொரியன் வெப் சீரிஸ்களை பார்ப்பதற்காகன் காரணம் ஃபீல் குட்டாக ரொமாண்டிக் காமெடியில் நிறைய சீரிஸ்கள் இருப்பது தான். இது ரசிகர்களுக்கு அதிகம் பிடிப்பதான் இந்த ஜானரில் உள்ள வெப் சீரிஸ்களை அதிகமாக பார்த்து வருகின்றனர்.
கொரியன் மட்டும் இன்றி மற்ற மொழிகளில் உள்ள ரொமாண்டிக் காமெடி வெப் சீரிஸ்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ள When I Fly Towards You என்ற சீன மொழி வெப் சீரிஸை மிஸ் பண்ணாமல் பாருங்க. இந்த சீரிஸ் தமிழிலும் காணக் கிடைக்கின்றது.
When I Fly Towards You வெப் சீரிஸின் கதை என்ன?
பள்ளியில் படிக்கும் போது 2 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் ஒரு ஆர்மி கேம்பிற்கு சென்ற இடத்தில் நண்பர்களாக ஆகிறார்கள். அதில் இந்த இரண்டு பெண்களும் வேறு வகுப்பு அந்த 3 ஆண்களும் வேறு வகுப்பு. டீன் ஏஜில் இருக்கும் இவர்களுக்கு இடையே நட்பு வளர்கிறது. இதற்கு முன்பே இதில் இருக்கும் நாயகன் மற்றும் நாயகிக்கு ஒருவர் மீது ஒருவருக்கு விருப்பம் ஏற்படுகின்றது.
தொடர்ந்து நண்பர்களாக பல நினைவுகளை உருவாக்கிக் கொள்ளும் இவர்கள் தொடர்ந்து பள்ளி படிப்பை முடிக்கும் போது தங்களது காதலை வெளிப்படுத்திக்கொள்கின்றனர். பிறகு கல்லூரியில் காதலுடன் தங்களது எதிர்காலத்திற்கு தேவையான படிப்பையும் சிறப்பாக முடித்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடைகிறார்கள். அதனைத் தொடர்ந்து இவர்களுடன் இருந்த மற்ற நண்பர்களும் அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் நினைத்த நல்ல இடத்தை அடைகிறார்கள்.
Also Read… பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் நடிகை மடோனா செபாஸ்டியன்
மீண்டும் அவர்களின் சொந்த ஊரிலேயே அனைவரும் வேலை செய்து தங்களது நட்பை இன்னும் அழகாக வளர்க்கிறார்கள். எந்த வயதில் என்ன விசயத்தை செய்ய வேண்டும் குழந்தைகள் என்பதை மிகவும் அழகாக இயக்குநர் இந்த வெப் சீரிஸில் காட்டியுள்ளார். கே ட்ராமாவை விரும்பி பார்ப்பவர்கள் இந்த சீரிஸை மிஸ் செய்யாமல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் பாருங்க.
Also Read… எனக்கு மிகவும் பிடித்த நடிகருடன் நடிச்சு இருக்கேன் – பள்ளிச்சட்டம்பி படம் குறித்து பேசிய கயாடு லோஹர்