Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ்நாட்டுக்கே பெருமை… இதற்காக நடிகர் அஜித் குமாருக்கு நன்றி…. உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

Ajith Kumar : நடிகர் அஜித் குமாரின் அஜித் குமார் ரேசிங் அணி ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேசில் 3வது இடத்தை பிடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கே பெருமை… இதற்காக நடிகர் அஜித் குமாருக்கு நன்றி…. உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
அஜித் குமார் - உதயநிதி ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Oct 2025 15:31 PM IST

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் (Ajith Kumar) தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இவரது அஜித் குமார் ரேசிங் அணி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. மேலும் இவர் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய சினிமா லோகோவையும், தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை சார்பில் எஸ்டிஏடி லோகோவையும் தனது ஜெர்சியில் இடம் பெற செய்திருக்கிறார். இந்த நிலையில் அவர், கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸ் போட்டியில் அஜித் குமார் ரேஸிங் அணி வெற்றிபெற்று 3வது இடத்தை பிடித்தது. இதனையடுத்து அவர் இந்திய தேசிய கொடியை பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஜித் குமாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஜித் குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

இந்த நிலையில் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, 24H ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி 3வது இடம் பிடித்த செய்தி அறிந்து பெருமை கொண்டேன். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் அஜித் குமார் மற்றும் அவரது அணிக்கு வாழ்த்துகள். இத்தகைய பெருமைக்குரிய போட்டியில் SDAT லோகோவை ஜெர்சி, வாகனத்தில் பொறித்து விளையாடியதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி. ரேசிங் களத்தில் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : அஜித்குமாருக்கு இப்படி ஒரு பிரச்னையா? – அவரே பகிர்ந்த தகவல்!

உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க : புதிய அணியுடன் அஜித்.. ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்பு

சமீபத்தில் ஸ்பெயின் மற்றும் பார்சிலோனாவில் நடைபெற்றுவந்த 24H கார் ரேஸ் போட்டிகளில் நடிகர் அஜித் குமாரின் அஜித் குமார் ரேசிங் அணி கலந்துகொண்டது.  இந்த நிலையில் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பெற்று இறுதிக்கட்ட போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் அஜித் குமார் மேடையில் இந்திய தேசியக்கொடியை பிடித்த படி இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.