டியூட் படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
Dude Movie: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் டியூட். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் டியூட். ரொமாண்டிக் ஆக்ஷன் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த டியூட் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடிகை மமிதா பைஜூ கமிட்டாகி நடித்து வருகிறார். குறிப்பாக நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தில் நடிகை மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த டியூட் படத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடிகர்கள் ஆர்.சரத்குமார், ஹிருது ஹாரூன், திராவிட் செல்வம், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது.




டியூட் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்:
இந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 17- தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் டியூட் படம் தமிழகத்தில் பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… பத்த வச்சுட்டியே பரட்ட… பிக்பாஸில் முதல் நாளே கிளம்பிய சர்ச்சை – வைரலாகும் வீடியோ
டியூட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Massive release for #DUDE in his homeground ❤🔥
Grand Tamil Nadu release by the prestigious @agscinemas 💥💥
Grand Festive Release on October 17th in Tamil & Telugu ✨
⭐ing ‘The Sensational’ @pradeeponelife
🎬 Written and directed by @Keerthiswaran_
Produced by… pic.twitter.com/FSM4Ap7OgI— Mythri Movie Makers (@MythriOfficial) October 6, 2025
Also Read… பைசன் தான் என் முதல் படம்னு நான் நினைக்கிறேன் – துருவ் விக்ரம் சொன்ன விசயம்!