Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth: இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்ற ரஜினிகாந்த்.. எளிமையான உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல்!

Rajinikanth In Himalayas: இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவை தொடர்ந்து ஆன்மிகத்திலும் ஆர்வம் காட்டிவருகிறார். அந்த வகையில் இவர் தனது நண்பர்களுடன் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்வது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Rajinikanth: இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்ற ரஜினிகாந்த்.. எளிமையான உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல்!
இமயமலைக்கு பயணம் சென்ற ரஜினிகாந்த் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Oct 2025 15:00 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் தமிழில் முன்னணி நாயகனாக படங்களில் நடித்த வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் கூலி (Coolie). இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்த நிலையில், மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) ஜெயிலர் 2 (Jailer 2) படத்தின் நடித்து வருகிறார். இந்த படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த இடத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது ரஜினிகாந்த்தும் ஷூட்டிங்கை விரைவில் முடிக்கவுள்ளார். மேலும் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் ஆன்மிக பயணமாக (Spiritual journey) இமயமலைக்கு (Himalayas) சென்றுள்ளார்.

அங்கு செல்லும்போது, சாதாரணமான நபரை போல வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டையுடன், சாலையோரமாக உணவு உண்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. ரஜினியின் எளிமையை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பேசிவருகின்றனர்.

இதையும் படிங்க: 80ஸ் 90ஸ் நட்சத்திரங்கள் ரீயூனியன்.. சென்னையில் களைகட்டிய கொண்டாட்டம்!

இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாபெரும் சிவ பக்தர் ஆவார். இவர் அடிக்கடி ஆன்மிக பயணம் செல்வது வழக்கம்தான். குறிப்பாக இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி சென்றுவருவது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 பற்றி பேசி பில்டப் செய்ய விரும்பல.. நெல்சன் திலிப்குமார் அதிரடி!

அதுபோல் இந்த 2025ம் ஆண்டில் இமயமலைக்கு தனது ண்பர்களுடன் செல்வது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த வருகிறது. எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஆன்மீகம் என்று வந்துவிட்டால் அனைவரும் எளிமைதான் என்று ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர்.

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 எப்போது ரிலீஸ்?

இந்த ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் நிலையில், ரஜினிகாந்த் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், சுராஜ் வெஞ்சராமூடு என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியில் வெளியாகும் என ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் படக்குழு இது பற்றி எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.