Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

80ஸ் – 90ஸ் நட்சத்திரங்கள் ரீயூனியன்.. சென்னையில் களைகட்டிய கொண்டாட்டம்!

Pan-Indian 80s 90s Stars Reunion: இந்திய சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் போன்ற காலகட்டத்தில் பல உச்ச நடிகர்கள் இருந்து வந்தனர். அதிலும் குறிப்பாக சில பிரபலங்கள் இன்று வரையிலும், சினிமாவில் முன்னணி வேடங்களிலும் நடித்து வருகின்றனர். அப்படிப்பட்ட பான் இந்திய நடிகர்கள் நேற்று 2025 அக்டோபர் 4ம் தேதியில் சென்னையில் ஒன்று கூடியுள்ளார்.

80ஸ் – 90ஸ் நட்சத்திரங்கள் ரீயூனியன்.. சென்னையில் களைகட்டிய கொண்டாட்டம்!
80ஸ் - 90ஸ் நட்சத்திரங்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Oct 2025 11:53 AM IST

சாதாரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் பல வருடங்கள் கழித்து ஒன்றுகூடி, தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்வார்கள். அந்த வகையில் இந்திய சினிமாவிலும் கிட்டத்தட்ட பல்வேறு நடிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்ட நடிகர்கள் (80s and 90s stars) தற்போது வரையிலும் சினிமாவில் இணைந்து முக்கிய வேடங்கள் மற்றும் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று 2025 அக்டோபர் 4ம் தேதியில் பான் இந்திய 80ஸ் மற்றும் 90ஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் (Stars Reunion) சென்னையில் (Chennai) ஒன்று கூடியுள்ளனர் . தங்களின் நட்பு மற்றும் நினைவுகளை வெளிப்படுத்தும் வகையில், இவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்திய (Pan Indian actors) 80ஸ் மற்றும் 90ஸ் நடிகர்கள் சென்னையில் சங்கமித்துள்ளனர். இதில் நடிகர்கள் சிரஞ்சீவி (Chiranjeevi), சரத்குமார் (Sarathkumar), வெங்கடேஷ், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், பாக்யராஜ், ஜெயசுதா மற்றும் குஷ்பூ உட்பட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணைந்ததில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பைசனில் விக்ரம் நடிக்க வேண்டும் என நினைத்தேன்- மாரி செல்வராஜ்!

நடிகர்கள் சங்கமம் குறித்து சிரஞ்சீவி வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நட்சத்திர ரியூனியன் பற்றி நடிகர் சிரஞ்சீவி, “80ஸ் காலகட்டத்தில் எனது அன்புக்குரிய நண்பர்கள் ஒவ்வொருவருடனுமான எனது சந்திப்பு, சிரிப்பு, பாசம் மற்றும் நினைவுகள் என அனைத்தையும் பகிர்ந்துகொண்ட, அது பிரிக்க முடியாத பிணைப்பால் இணைந்த ஒரு நினைவு பாதைக்கான நடைபயணம்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 பற்றி பேசி பில்டப் செய்ய விரும்பல.. நெல்சன் திலிப்குமார் அதிரடி!

எத்தனை அழகான நினைவுகள் இருந்தாலும், ஒவ்வொரு சந்திப்பையும் முதல் சந்திப்பு போல உணர்கிறேன்” என அந்த பதிவில் நடிகர் சிரஞ்சீவி தனது உணர்ச்சிபூர்வமான அன்பை பகிர்ந்துள்ளார்.

80ஸ் மற்றும் 90ஸ் நட்சத்திரங்கள் ரீயூனியனில் கலந்துகொண்ட நடிகர்கள் பட்டியல் :

இந்த நட்சத்திர ரீயூனியனில் நடிகர்கள், சிரஞ்சீவி, சரத்குமார், வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, நதியா, ராதா, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், ஜெயசுதா, சுமலதா, ரஹ்மான், குஷ்பூ, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், லிஸ்ஸி, ரேவதி, பிரபு, ஜெயராம், அஸ்வதி ஜெயராம், மீனா மற்றும் சரிதா என கிட்டத்தட்ட 31 நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் அனைவரும், ஒரே மாதிரியான உடைகளை அணிந்தபடியே இருக்கும் புகைப்படமானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.