Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

STR49 Movie: உச்சகட்ட எதிர்பார்ப்பு.. நாளை வெளியாகிறது சிலம்பரசனின் ‘STR49’ பட டைட்டில்!

STR49 Title Update: கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர்கள் சிலம்பரசன். இவரின் முன்னணி நடிப்பில் தயராகிவரும் திரைப்படம்தான் STR49. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கும் நிலையில், இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது பற்றி பார்க்கலாம்.

STR49 Movie: உச்சகட்ட எதிர்பார்ப்பு.. நாளை வெளியாகிறது சிலம்பரசனின் ‘STR49’ பட டைட்டில்!
சிலம்பரசனின் STR49 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Oct 2025 20:24 PM IST

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) முன்னணி நடிப்பில் அனைவரும் காத்திருக்கும் திரைப்படம்தான் STR49. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கும் நிலையில், வீ க்ரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் கலைப்புலி எஸ். தாணு (Kalaipuli S.Thanu) தயாரித்து வருகிறார். தக் லைஃப் திரைப்படத்தை முடித்த கையோடு சிலம்பரசன், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கும் படத்தில் இணைந்தார். அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் எழுந்த பிரச்சனையால் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சிலம்பரசன், வெற்றிமாறனின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது தற்காலிகமாக STR49 என ரசிகர்களால் அழைக்கப்பட்டவருகிறது.

இந்த படமானது தனுஷின் (Dhanush) வட சென்னை (Vada Chennai) படத்தின் பின்னணி கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாம். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவும் விரைவில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், படக்குழு இந்த STR49 படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி இந்த STR49 திரைப்படத்தின் டைட்டிலானது, நாளை 2025 அக்டோபர் 7ம் தேதியில் காலை 8 : 09 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : டியூட் படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

STR49 பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

STR49 திரைப்படத்தின் நடிகை யார் :

இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என ரசிகர்களிடையே கேள்விகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்க வைக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொடர்ந்து இந்த படத்தில் நடிகை சமந்தாவை நடிக்கவைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடப்பதாக வட்டரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இது உண்மையாக இருந்தாலே 2 ஆண்டுகளுக்கு பின் சமந்தாவுக்கு, தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இந்த தகவல்கள் குறித்து படக்குழு எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வட சென்னை பட பின்னணியில் உருவாகும் STR49 திரைப்படம் :

நடிகர் சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் முதல் முறையாகத்தான் இந்த STR49 படமானது உருவாகவுள்ளது. இதற்கு முன் இவர்கள் எந்த படத்திலும் இணைந்து பணியாற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த STR49 படமானது வட சென்னை படத்தில் உள்ள ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் பின்னணி கதையைத்தான் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாம்.

இதையும் படிங்க : கார் ரேஸ் போட்டிகளில் அஜித் குமார் தீவிரம் – தள்ளிபோகிறதா ‘AK64’ பட ஷூட்டிங்?

இந்த படத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் முக்கிய பங்காற்றிவருகிறாராம். இந்த STR49 படமானது மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகும் நிலையில், இதற்காக நடிகர் சிலம்பரசன் உடல் எடையை குறைத்து வருகிறார்.  இந்த STR49 படமானது மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளும் எழுந்து வருகிறது.