Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dude Movie: டாப் கியர்.. பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ பட டிரெய்லர் எப்போது ரிலீஸ்?

Dude Movie Trailer Update: தென்னிந்திய சினிமாவில் குறைவான படங்ககளில் நடித்திருந்தாலும், மக்களிடையே மிகவும் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் வரும் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் படம்தான் டியூட். இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Dude Movie: டாப் கியர்.. பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ பட டிரெய்லர் எப்போது ரிலீஸ்?
டியூட் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Oct 2025 18:06 PM IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) முன்னணி நடிப்பில் வரும் 2025 தீபாவளிக்கு வெளியாகும் படம்தான் டியூட் (Dude). இந்த படத்தை, இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கியுள்ளார்.  இந்த டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர் தமிழில் ஏற்கனவே கதாநாயகியாக ரிபெல் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த டியூட் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசைஅயமைத்திருக்கும் நிலையில், குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது.

இந்த படமானது அதிரடி காதல், நண்பர்கள் போன்ற மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தின் ரிலீஸிற்கு சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த டியூட் படத்தின் ட்ரெய்லர் வரும் 2025 அக்டோபர் 9ம் தேதியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஜீனி படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

டியூட் படக்குழு வெளியிட்ட டிரெய்லர் அறிவிப்பு

டியூட் படத்தின் கதைக்களம் என்ன?

இந்த டியூட் படமானது பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் 4வது படம். இதில் இவருடன் நடிகர்கள் மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி மற்றும் ஹிருது ஹூரன் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இருவரும் நிகழ்ச்சிகளை நடத்தும், ஈவென்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனத்தை நடத்திவருவதாகவும், அவர்களுக்குள் எவ்வாறு காதல் மலர்கிறது என்ற கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டியூட் திரைப்படத்தின் ரன்னிங் டைம் என்ன :

பிரதீப் ரங்கநாதனின் இந்த டியூட் படமானது கடந்த 2025 மார்ச் மாதத்தில் ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், கிட்டத்தட்ட 3 மாதங்களில் படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க : Dude – LIK பட ரிலீஸ் சிக்கல்… புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு!

இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழை கொடுத்திருப்பதாகவும், இப்படம் மொத்தமாக சுமார் ர் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ரன்னிங் டைம் உள்ளதாகவும் இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.