புஷ்பா 3 படத்திற்கு முன்பாக பிரபல நடிகருடன் இணையும் இயக்குநர் சுகுமார் – உற்சாகத்தில் ரசிகர்கள்
Director Sukumar: தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுகுமார். இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான புஷ்பா 2 படம் உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக பிரமண்ட நடிகருடன் கூட்டணி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையோடு வலம் வருபவர் இயக்குநர் சுகுமார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ஆர்யா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் அல்லூ அர்ஜூன் நாயகனாக நடித்து இருந்தார். ரொமாண்டிக் ஆக்ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ஜெகதம், ஆர்யா 2, 100% காதல், 1: நேனோக்கடினே, நன்னாக்கு பிரேமதோ, ரங்கஸ்தலம், புஷ்பா: தி ரைஸ், புஷ்பா 2: தி ரூல் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இயக்குநர் சுகுமார் நடிகர் அல்லூ அர்ஜுனை வைத்து இயக்கிய புஷ்பா: தி ரைஸ், புஷ்பா 2: தி ரூல் ஆகிய படங்கள் இவரை உலக அளவில் பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. செம்மர கடத்தல் கும்பலை மையமாக வைத்து உருவான இந்தப் படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸை கலக்கியது நிதர்சனமான உண்மை. மேலும் நடிகர் அல்லு அர்ஜூனை பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இந்த இரண்டு பாகங்களும் மாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புஷ்பா 2 தி ரூல் படத்திற்கு பிறகு அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா 3யை இயக்குநர் சுகுமார் எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதற்கு முன்பாக பிரபல நடிகருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




பிரபாஸுடன் கூட்டணி அமைக்கும் சுகுமார்:
நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தயாரிக்கும் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இடையில் இயக்குநர் சுகுமார் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ அவரது தயாரிப்பு நிறுவனமான எஸ்.வி.சி புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் ஆக்ஷன் மூவி ராவணபிரபு – ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
UNEXPECTED COLLABORATION !
Before the release of @alluarjun ‘s Pushpa 3 in 2027, director Sukumar is set to collaborate with actor Prabhas on an upcoming film. Sukumar recently narrated the storyline to #Prabhas two weeks ago, and the project will be produced under the banner of… pic.twitter.com/9gvH3HsZ8J
— Let’s X OTT GLOBAL (@LetsXOtt) October 9, 2025