Bison Movie: ‘காளமாடன் கானம்’… துருவ் விக்ரமின் ‘பைசன்’ படத்திலிருந்து வெளியான புதிய பாடல்!
Bison Movie Kaalamaadan Gaanam Song: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக ரசிகர்களை கவர்ந்துவருபவர் துருவ் விக்ரம். இவரின் முன்னணி நடிப்பில் 4வதாக தயாராகியுள்ளபடம்தான் பைசன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்திலிருந்து, காளமாட்டான் கானம் என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை இயக்கி வருபவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவரின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பல்வேறு விருதுகளை பெற்றத் திரைப்படம் வாழை (Vazhai). இந்த படத்தை அடுத்ததாக இவரின் இயக்கத்தில் 2025ம் ஆண்டில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் பைசன் (Bison). இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) இணைந்து நடித்துள்ளார். இவர்கள் ஜோடி முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கபடி விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தில் 4 பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில், 5வது பாடல் “காளமாடன் கானம்” (Kaalamaadan Gaanam) என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.




இதையும் படிங்க: மோகன்லாலின் பீரியட் ஆக்ஷன் படமான விருஷபா ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்!
மாரி செல்வராஜ் வெளியிட்ட பைசன் படத்தில் காளமாடன் கானம் என்ற பாடல் பதிவு
ஏய் காட்டரளி மாலகட்டி
கெளம்பி வாரான் காளமாடன்
அவன் பச்ச கறி படையலத்தான் கேட்டு
வாரான் காளமாடன் 🔥
_______________________________
காளமாடன் கானம் #KaalamaadanGaanam Out Now! 💥
▶️▶️ https://t.co/D4tgPtBVXK#BisonKaalamaadan 🦬 8 more days to go!!… pic.twitter.com/dPfotclKPh— Mari Selvaraj (@mari_selvaraj) October 9, 2025
பைசன் திரைப்படத்தின் பட்ஜெட்
இந்த பைசன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க, பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தில் துருவ் விக்ரமுடன் நடிகர்கள் அனுபமா பரமேஸ்வரன், லால், ரஜிஷா விஜயன், கலையரசன், பசுபதி மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணையானது நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேட்டுவம் என்ன மாதிரியான படமாக இருக்கும் – இயக்குநர் பா ரஞ்சித் ஓபன் டாக்
இந்த படமானது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படமானது சுமார் ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
பைசன் படத்தில் துருவ் விக்ரமின் கதாபாத்திரம்
இந்த் பைசன் படத்தில் துருவ் விக்ரம் , இதுவரை நடித்திடாத மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான 3 படங்களை ஒப்பிடும்போது, இந்த பைசன் படத்தில் இவரின் நடிப்பு மிகவும் வித்தியாசமாக வந்திருக்கிறது. இதில் இவர் கபடி வீரனாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் நிலையில், இந்த படம் நிச்சயமாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.