நீங்க என் அப்பா மாதிரி என்று கூறிய துருவ் விக்ரம்… நெகிழ்ந்த மாரி செல்வராஜ்
Director Mari Selvaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது பைசன் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ்.

இயக்குநர் ராமிடம் உதவியாளராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj). தமிழ் சினிமாவில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமான இது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தையும். நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தையும் தொடர்ந்து வாழை படத்தையும் இயக்கினார். இவரது இயக்கத்தில் தொடர்ந்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது பைசன் காளமாடன் என்ற படத்தை எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து உள்ளார். கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே தொடர்ந்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் அனுபமா பரமேசுரன், பசுபதி, லால், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், ஹரி கிருஷ்ணன், கலையரசன் மற்றும் அருவி மதானந்த் என்று பலர் நடித்துள்ளனர்.
துருவ் விக்ரம் குறித்து நெகிழ்ந்து பேசிய மாரி செல்வராஜ்:
இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் விகடனுக்கு அளித்தப் பேட்டியில் நடிகர் துருவ் விக்ரம் குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்தப் படம் தொடங்கியபோது நடிகர் துருவ் விக்ரமால் நடிக்கவே முடியவில்லை. மிகவும் சிரமபட்டார். நானுக் கதை வேண்டுமானால் மாற்றிவிடலாமா என்று கேட்டேன்.
அதற்கு துருவ் விக்ரம் வேண்டாம் எனக்கு கஷ்டமாதான் இருக்கு. ஆனா நீங்க இந்த கதையை எடுக்க வேண்டும் என்று வெறியாக இருக்கீங்க. உங்களுடைய கனவு படம் இது என்பது எனக்கு தெரியும். நான் உங்கள என் அப்பா மாதிரி நினைக்கிறேன். நீங்க என்ன பாத்துப்பீங்கனு எனக்கு தெரியும் என்று துருவ் கூறியது என்னை அசைத்துப் பார்த்தது என்று மிகவும் நெகிழ்ந்து பேசியுள்ளார் மாரி செல்வராஜ்.
Also Read… பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில் இத்தனை வசதிகளா? வைரலாகும் வீடியோ!
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
எனது அன்பின் துருவ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐❤️
பிரமிக்க வைக்கும் உன் உழைப்பின் மூலம் உன் கனவுகள் அத்தனையும் சாத்தியமாகட்டும் ❤️ நிச்சயம் வெல்வாய் நீ
வாழ்த்துக்கள் 💐His birthday song will come to you today as his lullaby! 🌸
Wishing our Kaalamaadan the best… pic.twitter.com/OA1NcnaRgx
— Mari Selvaraj (@mari_selvaraj) September 23, 2025
Also Read… 4 மாநில விருதுகளை வென்றது ரக்ஷித் ஷெட்டியின் 777 சார்லி படம்