சூரியின் மண்டாடி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய படக்குழுவினர்
Mandaadi Movie Accident Incident : நடிகர் சூரி தற்போது நாயகனாக நடித்து வரும் படம் மண்டாட்டி. இந்த மண்டாட்டி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதகா தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி பலப் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கான இடத்தைப் பிடித்தார் நடிகர் சூரி (Actor Soori). தொடர்ந்து தனது சிறப்பான காமெடி மூலம் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் நடிகர் சூரி. ஒரு கட்டத்தில் சூரியின் கால் ஷீட்டிற்காக பல முன்னணி நடிகர்கள் காத்திருக்கும் சூழலும் நிலவியது. காமெடியனாக நடிகர் சூரி நடித்தப் போது நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காம்போவை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. கடின உழைப்பு இருந்தால் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடிகர் சூரி காமெடியன் அவதாரத்தில் இருந்து நாயகன் அவதாரத்திற்கு முன்னேறினார். தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார்.
அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து நடிகர் சூரி தற்போது நாயகனாகவே நடித்து வருகிறார். அதன்படி இவர் நாயகனாக நடித்த கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2, மாமன் ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சூரி நடிப்பில் இறுதியாக வெளியான மாமன் படத்தின் மூலம் அவர் திரைக்கதை ஆசிரியராகவும் சினிமாவில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.




மண்டாட்டி படப்பிடிப்பு தளத்தில் விபத்து:
இந்த நிலையில் சூரியின் நடிப்பில் இறுதியாக வெளியான மாமன் படத்தை தொடர்ந்து தற்போது சூரி நாயகனாக நடித்து வரும் படம் மண்டாட்டி. தமிழில் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கும் சூரி தெலுங்கில் வில்லனாக இதேப் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் மண்டாட்டிப் படப்பிடிப்பு கடலில் நடந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக படக்குழு இருந்த கப்பல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக அந்த கப்பலில் இருந்த மண்டாட்டி படக்குழுவினர் உயிர் தப்பினர். ஆனால் அந்த கப்பலில் இருந்த ரூபாய் 10 கோடிக்கும் அதிகமான தொழில்நுட்ப கருவிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… இரண்டாவது முறையாக தேசிய விருது வென்ற ஜிவி பிரகஷ்… சூப்பரான கிஃப்ட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்
மண்டாட்டி படம் குறித்து சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Next focus 😍💪💯 #Mandaadi pic.twitter.com/Z8bbZ8onyV
— Actor Soori (@sooriofficial) June 18, 2025
Also Read… கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் நாயகன் படம்!