Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nayanthara: மீண்டும் அம்மனாக நயன்தாரா.. மூக்குத்தி அம்மன் 2 போஸ்டர் ரிலீஸ்!

Mookuthi Amman 2 First Look: தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நயன்தாரா. இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் மூக்குத்தி அம்மன் 2. இன்று விஜயதசமியை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

Nayanthara: மீண்டும் அம்மனாக நயன்தாரா..  மூக்குத்தி அம்மன் 2 போஸ்டர் ரிலீஸ்!
மூக்குத்தி அம்மன் 2 படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Oct 2025 12:45 PM IST

கோலிவுட் சினிமாவில் ஹாரர் மற்றும் கலக்கல் காமெடி படங்களுக்கு பெயர்போனவர் சுந்தர் சி (Sundar C). இவரின் இயக்கத்தில் இறுதியாக கேங்கர்ஸ் (Gangers) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலு (Vadivelu) இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தைத் தொடர்ந்து, இவரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2). இந்த படமானது கடந்த 2020ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜியின் (RJ.Balaji) இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் தொடர்ச்சியாக இந்த படமானது உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா (Nayanthara) முன்னணி கதாநாயகியாக நடிக்க, அவருடன் பல்வேறு நடிகைகளும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மார்ச் மாதத்தில், பூஜைகளுடன் தொடங்கியிருந்தது.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், தற்போது இப்படத்திலிருந்து சிறப்பான அப்டேட் வெளியாகியுள்ளது. இன்று 2025 அக்டோபர் 2ம் தேதியில், விஜயதசமியை முன்னிட்டு இப்படத்திலிருந்து முதல் பார்வை வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க : சூப்பரா? சொதப்பலா? – காந்தாரா சாப்டர் 1 படத்தின் விமர்சனம்!

மூக்குத்தி அம்மன் 2 படக்குழு வெளியிட்ட முதல் பார்வை பதிவு :

இந்த முதல் பார்வையில் நடிகை நயன்தாரா, அம்மன் வேடத்தில்  அமர்ந்திருப்பதுபோல இருக்கிறது. இந்த கதையில் நயன்தாரா 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், மூக்குத்தி அம்மன் 1 படத்தை ஒப்பிடும்போது, இந்த பார்ட் 2 படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

மூக்குத்தி அம்மன் 2 பட நடிகர்கள் :

இந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில், இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி-யும் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் இவர்களுடன் நடிகர்கள் ஊர்வசி, தான்யா விஜய், ரெஜினா கசான்ட்ரா, யோகி பாபு, அபிநயா, சிங்கம்புலி, மைனா நந்தினி, ராமச்சந்திரா ராஜு, மற்றும் இனியா உட்பட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் – 15 ஆண்டுகளை நிறைவு செய்தது எந்திரன் படம்!

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தில் கீழ் தயாரிப்பாளர் ஐசாரி கே கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.