மடோனா செபாஸ்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்டது ஹார்டின் படக்குழு!
Heartin Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மடோனா செபாஸ்டின். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேறபைப் பெற்று வரும் நிலையில் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது பிறந்த நாளை முன்னிட்டு ஹார்டின் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார் நடிகை மடோனா செபாஸ்டியன் (Actress Madonna Sebastian). இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை மடோனா செபாஸ்டியன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜாலியோ ஜிம்கானா. நடிகர் பிரபு தேவா நாயகனாக நடித்த இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து பலர் நடித்து இருந்தனர். டார்க் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்த ஜாலியோ ஜிம்கானா படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஒன்று அதிர்ஸ்டசாலி மற்றும் ஒன்றி ஹார்ட்டின். இந்த இரண்டு படங்களிலும் நடிகை மடோனா செபாஸ்டியன் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று நடிகை மடோனா செபாஸ்டியன் இன்று 1-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




மடோனா செபாஸ்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான போஸ்டர்:
இந்த நிலையில் நடிகை மடோனா செபாஸ்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு ஹார்ட்டின் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் சனந்த் நாயகனாக நடிக்க மற்றொரு நாயகியாக நடிகை இமயா டி நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் கிஷோர் குமார் எழுதி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படக்குழு மடோனா செபாஸ்டியனுக்கு வெளியிட்ட போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… இதுதான் கடைசி வார்னிங்… தவறான செய்திகள் பரப்புவர்கள் மீது மகிமா நம்பியார் காட்டம்
ஹார்டின் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We at @tridentartsoffl #steponestudios and team heartin wishes our heroine @madonnasebast14
a very happy birthday.#heartin – Coming soon to theatres near you.Starring – @sananth__ @madonnasebast14 @emayaing
Written & Directed by @kishoredir
A @RajeshMRadio Musical pic.twitter.com/RSCg5PCNUd
— Trident Arts (@tridentartsoffl) October 1, 2025
Also Read… சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாராவின் அன்னபூரனி படம் ஓடிடியில் ரிலீஸ்!