ஜிவி பிரகாஷ் குமார் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்
GV Prakash Kumar - Saindhavi Divorce Case: நடிகரும் இசையமைப்பாளருமாக தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலமானவராக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவருக்கும் இவரது மனைவி சைந்தவிக்கும் இன்று விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவலையளித்துள்ளது.

நட்சத்திர ஜோடிகளை ரசிகர்கள் திரையில் பார்த்து மட்டும் கொண்டாடுவது இல்லை அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் போது ரசிகர்கள் அதனை அதிகமாக கொண்டாடித் தீர்ப்பார்கள். அதன்படி பலர் திரையில் மட்டும் ஜோடியாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறுவது தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இதில் பலர் தங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து பலருக்கு முன்னுதாரனமாக விளங்குகிறார்கள். அதே நேரத்தில் சில நட்சத்திர ஜோடிகள் தங்களது திருமண வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்கள் காரணமாக பிரிந்துவிடுகின்றனர். அப்படி ஒரு விசயம் நிகழும் போது அவர்களின் ரசிகர்கள் மிகுந்த மன வேதனையை அடைகின்றனர். தொடர்ந்து சினிமா நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்ப்பது போல இந்த மாதிரியான செய்திகளும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில் இசைத் துறையில் அதிக ரசிகர்களைக் கொண்ட தம்பதிகளாக வலம் வந்தவர்கள் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் இருவரின் காம்பினேஷனில் வெளியாகும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம். இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் 2024-ம் ஆண்டு ஒத்த மனதுடன் பிரிவதாக தெரிவித்தனர். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியது.




ஜிவி பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்:
இதனைத் தொடர்ந்து இருவரும் விவாகரத்து கோரி குடும்பல நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்ந்து விசாரித்து வந்தது நீதிமன்றம். மேலும் இந்தப் வழக்கில் குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று இறுதியகா நடைப்பெற்ற வழக்கு விசாரனையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இவர்களின் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… வாசூலில் தெறிக்கவிடும் பவன் கல்யாணின் OG படம்… எவ்வளவு தெரியுமா?
ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A Blessing for the second time ❤️ #vaathi pic.twitter.com/26KjmEIvF6
— G.V.Prakash Kumar (@gvprakash) August 1, 2025
Also Read… விஜயுடன் மோதும் பிரபாஸ்… தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!