Dhanush: இட்லி கடை படத்துக்கா தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Dhanush salary In Idli Kadai: தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் இட்லி கடை படமானது 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு தனுஷ் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ் (Dhanush). இவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பல்வேறு பணிகளை சினிமாவில் செய்துவருகிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் 4வதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் இட்லி கடை (Idli Kadai). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் தனுஷ் முன்னணி ஹீரோவாகவும், இயக்குநராகவும் பணியாற்றியிருக்கும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen) நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் தயாராகியிருக்கும் நிலையில், இந்த படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த இட்லி கடை படத்தில் நடிப்பதற்கு மற்றும் இயக்குவதற்கும் சேர்த்து நடிகர் தனுஷ் சுமார் ரூ 40 கோடிகளை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலின் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.




இதையும் படிங்க : தெலுங்கில் முன்னணி நடிகரின் படத்தில் சிலம்பரசன்?
தனுஷின் இட்லி கடை படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்
A story from the heart, made for every home ✨#IdliKadai நாளை முதல்❤️
Grab your tickets now ♨️🍿@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @saregamasouth @dancersatz @MShenbagamoort3 @kavya_sriram… pic.twitter.com/QoETVjersV
— DawnPictures (@DawnPicturesOff) September 30, 2025
தனுஷின் இட்லி கடை படத்தின் மொத்த பட்ஜெட்
நடிகர் தனுஷின் இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, பார்த்திபன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கிராமத்து கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிகர் கே மணிகண்டன் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கரூர் சோக சம்பவம்.. காந்தாரா படக்குழு செய்த விஷயம்!
மொத்தத்தில் இந்த இட்லி கடை படம்னது தனுஷின் இயக்கத்தில் ராயன் படத்தை தொடர்ந்து வெளியாகும் பிரம்மாண்ட திரைப்படமாகும். இந்த படமானது சுமார் ரூ 100 கோடி பொருட்செலவில் தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இட்லி கடை படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
தனுஷின் இந்த இட்லி கடை படமானது அவரின் நடிப்பில் இந்த் 2025ம் ஆண்டில், அதிகம் எதிர்பார்ப்புகளுடன் கூடிய கதைக்களம் கொண்ட படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருக்கும் நிலையில், இது இன்னும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை தொடர்ந்து முதல் நாளில் சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.