Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Parasakthi: இறுதிக்கட்டத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி.. ஷூட்டிங் எப்போது முடிகிறது தெரியுமா?

Parasakthi Movie Shooting Update: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் பராசக்தி. இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், எப்போது ஷூட்டிங் முடிகிறது என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Parasakthi: இறுதிக்கட்டத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி.. ஷூட்டிங் எப்போது முடிகிறது தெரியுமா?
சிவகார்த்திகேயனின் பராசக்தி படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Sep 2025 21:00 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக மதராஸி (Madharaasi) படமானது வெளியானது. இந்த படமானது கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்த் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) படத்தை இயக்கிவருகிறார். இந்த படமானது 1965ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறது.

இந்த படத்தில் நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் எப்போது ஷூட்டிங் முடியும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகிவருகிறது. அதன்படி, பராசக்தி படத்தின் ஷூட்டிங் 2025 அக்டோபர் 15ம் தேதியுடன் நிறைவடையும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : தாதாசாகேப் பால்கே விருது வென்ற மோகன்லால் – கேரள அரசு சார்பில் பாராட்டுவிழா அறிவிப்பு!

பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் கதை :

நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த பராசக்தி படத்தில் நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் சோமசுந்தரம் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் ராணா டகுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பராசக்தி படத்தின் கதைக்களமானது கடந்த 1965ம் ஆண்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு தொடர்பான கதையில் உருவாகிவருகிறதாம். இந்த படத்தின் கதைக்களமானது அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மத்தியில் போராட்டம் மற்றும் இந்தி திணிப்பிற்கு எதிரான குரல்கள் போன்ற உண்மையான கதைக்களம் கொண்ட படமாக தயாராகிவருகிறது.

இதையும் படிங்க : கரூரில் நடந்த விபத்து பெருந்துயர் அளிக்கிறது – நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் 2025 அக்டோபர் மாதத்தில் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு, 6 நாட்கள் முன் தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமானது வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.