Mohanlal: தாதாசாகேப் பால்கே விருது வென்ற மோகன்லால் – கேரள அரசு சார்பில் பாராட்டுவிழா அறிவிப்பு!
Mohanlal Dadasaheb Phalke Award: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக கலக்கி வருபவர் மோகன்லால். இவருக்கு சமீபத்தில் நடைபெற்ற 71வது தேசிய விருது வழங்கும் விழாவில், 2023ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மோகன்லாலை சிறப்பிக்கும் வகையில் கேரள அரசின் சார்பில் பாராட்டுவிழா அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் மோகன்லால் (Mohanlal). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்ககள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இதுவரையில் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இந்நிலையில், நடிகர் மோகன்லாலை சிறப்பிக்கும் விதத்தில் மத்திய அரசு (Central Government) இவருக்கு கடந்த 2025 செப்டம்பர் 20 ஆம் தேதி தாதாசாகேப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) அறிவித்திருந்தது. சினிமாவில் சிறப்பான நடிப்பிற்காகவும் மற்றும் பங்களிப்பிற்காகவும் 2023ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த விருதானது 71வது தேசிய திரைப்பட விருது (71st National Film Awards) வழங்கும் விழாவில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இந்நிலையில், மோகன்லாலை பாராட்டும் விதத்தில் கேரள அரசு (Government of Kerala) அவருக்கு பாராட்டு விழாவை அறிவித்துள்ளது. இந்த பாராட்டு விழா அவரும் 2025 அக்டோபர் 4ம் தேதியில் நடைபெறும் என கூறப்படுகிறது.




இதையும் படிங்க : பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் நடிகை மடோனா செபாஸ்டியன்
மோகன்லாலுக்கு பாராட்டு விழா நடத்தும் கேரள அரசு
நடிகர் மோகன்லால் 2023ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதை வென்றுள்ளார். இந்நிலையில் இவரை பெருமைப்படுத்தும் விதத்திலும் கேரள அரசு வரும் 2025 அக்டோபர் 4ம் தேதியில் பாராட்டுவிழாவை நடத்தவுள்ளது. இந்த விழாவானது அக்டோபர் 4ம் தேதியில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக கேரள அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மோகன்லாலுடன் நடிகர்கள் மம்முட்டி மற்றும் பல்வேறு நடிகர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
தாதாசாகேப் பால்கே விருது வென்றது குறித்து மோகன்லால் வெளியிட்ட பதிவு :
Gratitude 🙏#DadasahebPhalkeAward pic.twitter.com/RyJYt0eQd3
— Mohanlal (@Mohanlal) September 23, 2025
மேலும் நடிகர் மோகன்லாலுடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் பாடகர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் கே.எஸ். சித்ரா போன்ற பாடகர்கள் பாடலை பாடவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : OG படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு – நெகிழ்ந்த பிரியங்கா மோகன்
மேலும் இந்த நிகழ்ச்சியின்போது, மோகன்லாலுக்கு லெப்டினன்ட் பதவியும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவ அதிகாரியாகவும் மற்றும் ராணுவத்தை சிறப்பிக்கும் விதத்திலும் படங்களில் நடித்திருந்த நிலையில், அவருக்கு இந்த பதவியும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.