Rishabh Shetty: காந்தாரா சாப்டர் 1, பார்ட் 2 இல்ல.. இன்னும் நிறைய இருக்கு – ரிஷப் ஷெட்டி கொடுத்த அப்டேட்!
Rishabh Shetty About Kantara Story Continuity: ரிஷப் ஷெட்டியின் முன்னணி இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காந்தாரா. இந்த படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் கதைக்களம் பற்றி ரிஷப் ஷெட்டி அப்டேட் கொடுத்துள்ளார்.

கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர் மற்றும் இயக்குநராக பிரபலமாக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty). இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான காந்தாரா (Kantara) திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படமானது சுமார் ரூ 14 கோடிகளில் வெளியாகி உலகமெங்கும் சுமார் ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் அடுத்த பாகமாக காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1) படமானது உருவாகியுள்ளது. இந்த படமானது காந்தரா படத்தின் முன் நடந்த கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திலும் நடிகர் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 2ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் கதை தொடர்ச்சியை பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : அசுரன் படத்தில் கென் கருணாஸ் காட்சிகர் ரீ ஷூட் செய்யப்பட்டது – ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன விசயம்
காந்தாரா படத்தின் கதை தொடர்ச்சி குறித்து ரிஷப் ஷெட்டி பேச்சு :
சமீபத்தில் பேசிய இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், காந்தரா படத்தின் கதை தொடச்சிக் குறித்து பேசியுள்ளார். அதில் ரிஷப் ஷெட்டி, “காந்தாரா என்ற படத்தின் தொடர்பாக நிறைய கதை என்னிடம் இருந்தது. மேலும் என்னிடம் இந்த காந்தார படத்தை முடித்தவுடன் நிறைய ஐடியா இருந்தது. எப்போதும் ஊர்களில் ஒரு கதையை இரண்டுவிதமாக கூறுவார்கள், அதை போல நானும் இந்த காந்தாரா படத்தை 2 பாகங்களாக இயக்கவேண்டும் என கூறியிருந்தேன். அதற்கு எனது நண்பர்கள் எல்லாரும் சிரித்தார்கள்.
கந்தரா படக்குழு வெளியிட்ட முதல் பாடல் குறித்த பதிவு :
A symphony of faith, a celebration of tradition 🔱🔥
First Single #Brahmakalasha from #KantaraChapter1 is now streaming on all music platforms.
Kannada – https://t.co/VVqWIxVrUP
Hindi – https://t.co/ILLBjbxwlW
Telugu – https://t.co/R47Qw95ydP
Tamil – https://t.co/16uEBjW1Wt… pic.twitter.com/UE6riVz0gT— Hombale Films (@hombalefilms) September 28, 2025
முதல் படத்தையே என்னால் எடுக்கமுடியாது என கூறினார்கள். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை இருந்தது, முதல் பார்ட் படத்தை பண்ணிட்டு, அப்படியே அதன் பின் கதையையும் ஒரு படமாக எடுக்க வேண்டும் என நினைத்தேன். அப்டித்தான் இந்த காந்தாரா சாப்டர் 1 படமும் உருவானது.
இதையும் படிங்க : நான் சிலம்பரசனுடன் நடிக்கவிருந்த முதல் படம் அதுதான் – கயாடு லோஹர் சொன்ன விஷயம்!
இந்த கதையிலும் இன்னும் அடுத்த அடுத்த பார்ட் எடுக்கலாம். ராஜாவின் கதையை வைத்து ஒரு படத்தை எடுக்கலாம். காந்தாரா படத்தில் நிம்மதில் இல்லாமல் அலைந்த அந்த ராஜாவை வைத்தும் ஒரு கதையை எடுக்கலாம். இந்த இரண்டு பாகங்களை தொடர்ந்து, இன்னும் 2 பாகங்களுக்கு கதை இருக்கிறது” என நடிகர் ரிஷப் ஷெட்டி அதில் பேசியிருந்தார்.