Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mohanlal: மோகன்லாலுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது – மத்திய அரசு அறிவிப்பு!

Dadasaheb Phalke Award 2023: தென்னிந்திய சினிமாவில் பிரபலம் மிக்க நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் மோகன்லால். இவர் மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு, 2023ம் ஆண்டிற்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது.

Mohanlal: மோகன்லாலுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது – மத்திய அரசு அறிவிப்பு!
நடிகர் மோகன்லால்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Sep 2025 19:57 PM IST

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால் (Mohanlal). இவர் தொடர்ந்து சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் நிலையில், தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்தது வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக ஹிருதயபூர்வம் (Hridayapoorvam) என்ற படமானது வெளியாகியிருந்தது. இவரின் இந்த படமானது மலையாள மக்களிடையே மோகன்லாலுக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். இவரின் நடிப்பில் சினிமாவில் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்தது வருகிறார்.

சினிமாவில் மீது தொடர்ந்து தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார் இந்நிலையில், நடிகர் மோகன்லாலை கௌவரவிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு (Indian government) விருது அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான “தாதாசாகேப் பால்கே” (Dadasaheb Phalke Award) விருதை மத்திய அரசு, நடிகர் மோகன்லாலுக்கு அறிவித்துள்ளது. இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க :  அது கடையில்ல இந்த ஊரோட அடையாளம்.. வெளியானது தனுஷ் – நித்யா மேனனின் ‘இட்லி கடை’ பட ட்ரெய்லர்!

மோகன்லாலுக்கு விருது அறிவித்தது தொடர்பாக வெளியான பதிவு

மோகன்லாலுக்கு எப்போது கொடுக்கப்படுகிறது தாதா சாகேப் பால்கே விருது?

நடிகர் மோகன்லாலுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நடிகர் மோகன்லாலின் சினிமா பயணம் மற்றும் அதை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த விருதானது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என்ற பெயரில் அவர் கௌவரவிக்கபடவுள்ளார்.

இதையும் படிங்க : டியூட் படத்தின் ‘நல்லாரு போ’ என்ற பாடலை பாடியது இவரா?.. சாய் அபயங்கர் செய்த மாஸ் சம்பவம்!

இந்த விருதை இந்திய அரசாங்கம், நடிகர் மோகன்லாலுக்கு வரும் 2025, செப்டம்பர் 23 ம் தேதி அன்று நடைபெறவுள்ள, 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மோகன்லாலின் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் வாங்கி குவித்த விருதுகள்

நடிகர் மோகன்லால், வெறும் ஒன்று இரண்டு விருதுகளை மட்டும் பெறவில்லை, அவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ, சிறந்த இந்திய நடிகர், கேரளாவில் சிறந்த நடிகர், IIFA விருது என அவர் வாங்கிய விருதுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு மலையாள சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் சிறந்த நடிகர்களில் ஒருவராக நடிகர் மோகன்லால் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.