Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் சோக சம்பவம்.. காந்தாரா படக்குழு செய்த விஷயம்!

Kantara Chapter 1: கன்னட மொழியை அடிப்படையாக கொண்டு பான் இதை படமாக உருவாகியிருப்பது காந்தாரா சாப்டர் 1. ரிஷப் ஷெட்டியின் முன்னணி இயக்கம் மற்றும் நடிப்பில் இப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்நிலையில் காந்தாரா படக்குழு தனது தமிழ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளது.

கரூர் சோக சம்பவம்..  காந்தாரா படக்குழு செய்த விஷயம்!
காந்தாரா சாப்டர் 1 படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Sep 2025 11:00 AM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty). இவரின் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் பான் இந்திய வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 2ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது .கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடந்திருந்த நிலையில், இன்று 2025 செப்டம்பர் 30ம் தேதியில் தமிழகத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி (Pre-release event) நடைபெறவிருந்தது. மேலும் சமீபத்தில் நடந்த கரூர் (Karur) சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதன் காரணமாக இந்த படத்தின் தமிழ் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளது.

இதை தொடர்பாக படக்குழு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தமிழக மக்கள் கடும் துயரில் இருக்கும் நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தின் தமிழ் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஒத்திவைத்திருப்பதாகவும், விரைவில் மக்களை சந்திக்க வருகிறோம் என்றும் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : சாய் ப்ரோ பிஜிஎம் அனிருத்துக்கும் மேல.. ரசிகரின் பேச்சிற்கு சாய் அபயங்கரின் ரியாக்ஷ்ன்.. வைரலாகும் வீடியோ!

காந்தாரா படத்தின் தமிழ் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒத்திவைப்பு தொடர்பாக படக்குழு வெளியிட்ட பதிவு :

காந்தாரா சாப்டர் 1 படத்தின் கதைக்களம் :

இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது, கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படத்தின் முன் நடந்த கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி முன்னணி வேடத்தில் நடிக்க அவர்க்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவர் தமிழில் ஏற்கனவே மதராஸி மற்றும் ஏஸ் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஒரு நாள் முன்னே தமிழகத்தில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1.. வைரலாகும் தகவல்!

இந்த காந்தாரா சாப்டர் 1ன் படத்தின் கதைக்களமானது, பஞ்சுரளி தெய்வம் எப்படி உருவானது மற்றும் அதன் அடிப்படை காரணம் என்ன என்பதுதான் இப்படத்தின் மைய கருவாகும். இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் நிலையில், நிச்சயமாக பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் காந்தாரா சாப்டர் 1 ப்ரோமோஷன் :

இதுவரை வெளியாகியிருந்த பிரம்மாண்ட கன்னட படங்களை விடவும், இந்த காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஆர்வமுடன் காத்திருந்தனர். காந்தாரா படமானது சுமார் ரூ14 கோடியில் உருவாகி, உலகமெங்கும் சுமார் ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட் கொடுத்திருந்தது.

அந்த வகையில் இந்த காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு உலகமுழுவதும் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக UK போன்ற நாடுகளில் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .