வெளியானது ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Thalaivar Thambi Thalaimaiyil Movie : நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தலைவர் தம்பி தலைமையில். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கி தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா (Actor Jiiva). தொடர்ந்து காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் மற்றும் ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் என்று நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ஜீவாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அகத்தியா. கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. ஹாரர் படமாக வெளியான் இந்த அகத்தியா படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா தற்போது தலைவர் தம்பி தலைமையில் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இவர் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான ஃபலிமி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் நிதிஷ் சகாதேவ். இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் நாயகனாக நடித்து இருந்தார். ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
மலையாள சினிமாவில் தான் இயக்கிய முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவின் 45-வது படத்தினை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன்படி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தலைவர் தம்பி தலைமையில் என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் நடிகர் ஜீவாவின் லுக்கை பார்த்த ரசிகர்கள் இது நிச்சயமாக காமெடி ஜானரில் இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read… Dhanush: இட்லி கடை படத்துக்கா தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தலைவர் தம்பி தலைமையில் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A man torn between two worlds…
Presenting the quirky and fun-filled poster of #Jiiva45 – #ThalaivarThambiThalaimaiyil 🔥Enna Makkaaa Readyaa ! 😎
Directed by @NithishSahadev
Produced by #KRGroups
Co -Producer #DeepakRavi
A #Vishnuvijay MusicalPresented by @kannanravi50388 pic.twitter.com/BYyvMJrfdL
— KANNAN RAVI GROUPS (@KRGOffl) October 1, 2025
Also Read… Arun Vijay: ரெட்ட தல பட டிரெய்லரில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – அப்டேட் கொடுத்த அருண் விஜய்!