Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Arun Vijay: ரெட்ட தல பட டிரெய்லரில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

Retta Thala Movie: நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம் ரெட்ட தல. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அப்டேட்டை அருண் விஜய் கொடுத்துள்ளார்.

Arun Vijay: ரெட்ட தல பட டிரெய்லரில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – அப்டேட் கொடுத்த அருண் விஜய்!
அருண் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Sep 2025 22:37 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அருண் விஜய் (Arun Vijay). இவரின் நடிப்பில் ஆண்டுதோறும் பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் வணங்காண் (Vanangaan). இந்த படத்தை இயக்குநர் பாலா (Bala) இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் முன்னணி நடிப்பில் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் தயாராகிவரும் படம்தான் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தைப் பிரபல இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் (Kris Thirukumaran) இயக்கியுள்ளார். இந்த ரெட்ட தல படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதில் அவருக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி (Siddhi Idnani) நடித்துள்ளார்.

இந்த படமானது மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில் ரிலீஸ் எப்போது என எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அருண் விஜய், ரெட்ட தல படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : தனுஷின் இட்லி கடை ரிலீஸ்.. வைரலாகும் மேக்கிங் வீடியோ!

ரெட்ட தல படம் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்த அருண் விஜய் :

அந்த நேர்காணலில் பேசிய அருண் விஜய்யிடம், தொகுப்பாளர் ரெட்ட தல படம் எப்போது ரிலீசாகும் என கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அருண் விஜய், ” ரெட்ட தல படம் கூடிய சீக்கிரத்தில் வெளியாகும். படத்தின் சென்சார் வேலைகள் தீவிரமாக நடந்துவருகிறது. மேலும் இப்படத்தின் கடைசிகட்ட வேலைப்பாடுகள் நடந்துவருகிறது. மேலும் இப்படைத்த சிஜி வேலைகளும் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: AK64 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.. அஜித் குமார் கொடுத்த அப்டேட் இதோ!

இந்த ரெட்ட தல படமானது, இதுவரை நான் பண்ண படங்களில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும். இந்த படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸான விஷயம் ஒன்று இருக்கிறது. படத்தின் டீசர் சமீபத்தில்தான் வெளியானது, மேலும் இப்படத்தின் ட்ரெய்லரின் அந்த சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு இருக்கும் என நடிகர் அருண் விஜய் அப்டேட் கொடுத்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகிவருகிறது.

ரெட்ட தல படத்தின் முதல் பாடல் குறித்து வெளியான பதிவு :

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல படைத்த தொடர்ந்து, தனுஷின் இட்லி கடை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய். அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில், தனுஷிற்கு எதிரான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் நிலையில், 2025 அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.