Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனுஷ் – மமிதா பைஜூவின் டி54 படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

D54 Movie Update: நடிகர் தனுஷ் சினிமாவில் பல்வேறு விதமாக பணிகளை சிறப்பாக செய்துவருகிறார். இவரின் நடிப்பும், இயக்கத்திலும் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் டி54 என்ற படத்தில் நடித்துவந்தார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.

தனுஷ் – மமிதா பைஜூவின் டி54 படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
தனுஷின் டி54 படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Oct 2025 18:31 PM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தனுஷ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமில்லாமல், இயக்குநராகவும் படங்களை தொடர்ந்து இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் இட்லி கடை (Idli Kadai). இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இயக்குநராக தனுஷின் 4வது படமாக கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தனுஷ் தமிழில் தற்போது, டி54 (D54) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை, அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்திருந்த போர் தொழில் (Por Thozhil) பட இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜூலை மாதத்தில் தொடங்கியிருந்த நிலையில், கிட்டத்தட்ட 3 மாதங்களில் படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் நிறுவடைந்துள்ளதாம். இந்நிலையில் இப்படத்தில் ரிலீஸ் எப்போது என்பது குறித்து தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாத்த படத்தில் சொன்னது வேற செஞ்சது வேற – குஷ்பூ ஓபன் டாக்

தனுஷின் டி54 திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பது பற்றி தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், தனுஷின் டி54 படம் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். அதில் அவர் தனுஷின் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடையவுள்ளது. மேலும் இந்த படத்தை வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுவருகிறோம் என அவர் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

டி54 படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

தனுஷின் டி54 திரைப்படம் :

தனுஷின் இந்த டி54 படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இதில் தனுஷ் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: தேசிய விருது தயாரிப்பாளருடன் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் தகவல்!

இவர் தனுஷுடன் இந்த படத்தில்தான் முதல் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜூலை மாதத்தின் பூஜைகளுடன் தொடங்கியிருந்தது. பல்வேறு இடங்ககளில் நடைபெற்றுவந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கானது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாம். மேலும் விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.