Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அண்ணாத்த படத்தில் சொன்னது வேற செஞ்சது வேற – குஷ்பூ ஓபன் டாக்

Annaatthe Movie: தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தற்போது சினிமா அரசியல் என தொடர்ந்து இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை குஷ்பூ. இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய நடிகை குஷ்பூ அண்ணாத்த படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அண்ணாத்த படத்தில் சொன்னது வேற செஞ்சது வேற – குஷ்பூ ஓபன் டாக்
அண்ணாத்தImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Oct 2025 12:32 PM IST

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அண்ணாத்த. இயக்குநர் சிவா எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, பச்சக்கிளியாக சூரி, அபிமன்யு சிங், பிரகாஷ் ராஜ், பாலா, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், சதீஷ், சத்யன், வேல ராமமூர்த்தி, பில்லி முரளி, ரோஹித் நாயர், முக்தர் கான், ஐயப்ப பி.சர்மா, குளப்புள்ளி லீலா, அஞ்சலி நாயர், பானர்ஜி, பிறைசூடன், நாடோடிகள் கோபால், தவசி, ரெடின் கிங்ஸ்லி, அர்ஜய், விஸ்வந்த், ரவி அவானா, அரவிந்த் கிருஷ்ணா, அனிகேத் சவுகான், ராஜிதா, ஹிருஷிகேஷ், ஸ்ரீஜா ரவி, ஜார்ஜ் மரியன், ஸ்ரீரஞ்சனி, சி.ரங்கநாதன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை குஷ்பூ முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

அண்ணாத்த படத்தில் சொன்னது வேற செஞ்சது வேற:

அதன்படி நடிகை குஷ்பூ அளித்தப் பேட்டியில் கூறியதாவது, அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் கதாப்பாத்திரத்திற்கு ஜோடி கிடையாது என்றும் அவரது முறை பெண்களாக நானும் மீனாவும் நடிக்க உள்ளதாக எங்களுக்கு கதையை சொன்னார்கள். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு நடிகையை கொண்டுவந்து டூயட் பாடலை வைத்தார்கள்.

எங்களுக்கு ஒன்னுமே புரியல படம் எடுக்குறதுக்கு முன்னாடி எங்களுக்கு சொன்ன கதை வேற எடுத்த கதை வேற என்று மிகவும் வருத்தத்துடன் அந்தப் பேட்டியில் நடிகை குஷ்பூ தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… அனல் பறக்கும் தனுஷின் நடிப்பில் வெளியானது தேரே இஸ்க் மெய்ன் படத்தின் டீசர்

இணையத்தில் கவனம் பெறும் குஷ்பூவின் பேச்சு:

Also Read… இரண்டாவது முறையாக தேசிய விருது வென்ற ஜிவி பிரகஷ்… சூப்பரான கிஃப்ட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்