Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

96 பட இயக்குநருடன் இணையும் ஃபகத் பாசில்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

Prem Kumar and Fahadh Faasil: பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிரேம் குமார். கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான 96 என்ற படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இந்நிலையில், இவர் நடிகர் ஃபகத் பாசிலின் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் குறித்து தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.

96 பட இயக்குநருடன் இணையும் ஃபகத் பாசில்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?
பிரேம் குமார் மற்றும் ஃபகத் பாசில்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 04 Oct 2025 18:26 PM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான 96 என்ற படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான இயக்குநர் பிரேம் குமார் (Prem Kumar). இவருக்கு இந்த படமானது ஒட்டுமொத்த இந்திய அளவிற்கு மிகுந்த பிரபலத்தை கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தை அடுத்தாக நடிகர் கார்த்தி (Karthi) மற்றும் அரவிந்த் சுவாமியை (Arvind Swamy) வைத்து “மெய்யழகன்” (Meiyazhagan) என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகி மக்களிடையே சிறப்பான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) 44வது படத்தையும் இவர்தான் இயக்கவுள்ளார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படங்களின் வரிசையில் பிரபல நடிகரான ஃபகத் பாசிலை (Fahadh Faasil) வைத்தும் புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் ((Isari K Ganesh)) தயாரிக்கவுள்ளாராம். மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஐசரி கே கணேஷ் , இந்த புதிய படத்தின் ஷூட்டிங் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:  சினிமாவில் புது அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் – வைரலாகும் தகவல்

ஃபகத் பாசில் மற்றும் பிரேம் குமார் கூட்டணி படத்தின் ஷூட்டிங் அப்டேட் :

சமீபத்தில் நேர்காணலில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், ” அந்த படம் யாருமே எதிர்பார்க்காத காமினேஷன். அந்த படத்தைப் பற்றி இயக்குநர் பிரேம் குமார் ஒரு நேர்காணலில் கூறிவிட்டார். நடிகர் ஃபகத் பாசிலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவதாக கூறியிருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங் உடனடியாக ஆரம்பமாகவுள்ளது. அந்த கதைக்கு ஃபகத் பாசில்தான் சரியாக இருப்பாரு.

இதையும் படிங்க: ரகசியமாக நடந்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம்.. திருமணம் எப்போது தெரியுமா?

அந்த படமானது அவருக்கு இன்னொரு ஆவேசம் படத்தை போல இருக்கும்” என தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் அப்டேட் கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இப்படத்தின் ஷூடிங் விரைவில் தொடங்குவதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் ஐசாரி கே கணேஷ் பேசிய வீடியோ பதிவு

பிரேம் குமார் மற்றும் விக்ரமின் படம் :

நடிகர் விக்ரமின் நடிப்பில் மட்டுமே கிட்டத்தட்ட 2 படங்கள் தயாராகிவருகிறது. மாவீரன் பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சியான் 63 படத்திலும் மற்றும் இயக்குனர் பிரேம் குமாரின் இயக்கத்தில் சியான்64 என இரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கவுள்ள சியான்64 படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இதில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்குவதாக தகவல் வெளியாகிவருகிறது.