Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sai Abhyankkar: மிகவும் திறமையானவர்.. சாய் அபயங்கரைப் பாராட்டிய டியூட் பட தயாரிப்பாளர்!

Dude Producer praised Sai Abhyankkar: இளம் இசையமைப்பாளராக தனது பாடலின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய் அபயங்கர். தமிழ், மலையாளம் போன்ற மொழியிலும் இசையமைத்துவரும் நிலையில், டியூட் படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் பிரம்மாண்ட பட்ஜெட் படத்திற்கும் இவர் இசையமைப்பதாக, டியூட் பட தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.

Sai Abhyankkar: மிகவும் திறமையானவர்.. சாய் அபயங்கரைப் பாராட்டிய டியூட் பட தயாரிப்பாளர்!
சாய் அபயங்கரை பாராட்டிய டியூட் பட தயாரிப்பாளர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 09 Oct 2025 23:18 PM IST

கோலிவுட் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்துவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). தமிழ் சினிமாவின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் வெளியான முதல் திரைப்படம் பல்டி (Balti). மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில், சாந்தனு மற்றும் ஷேன் நிகம் இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் தமிழ் மக்களிடையேயும் வைரலாகிவந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கு முதல் படமாக அமைந்திருப்பது டியூட் (Dude). நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) டியூட் திரைப்படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார்.

இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவருகிறது.

இதையும் படிங்க: ‘காளமாடன் கானம்’… துருவ் விக்ரமின் ‘பைசன்’ படத்திலிருந்து வெளியான புதிய பாடல்!

இன்று 2025 அக்டோபர் 9ம் தேதியில் தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அதில் பேசிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர், சாய் அபயங்கரை புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் தெலுங்கு பிரம்மாண்ட படத்திற்கு இசையமைப்பதாகவும் கூறியுள்ளார்.

சாய் அபயங்கர் குறித்து பெருமையாக பேசிய டியூட் பட தயாரிப்பாளர் :

டியூட் பட தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர், அதில் சாய் அபயங்கர் குறித்து பெருமையாக பேசியுள்ளார். அதில் அவர், “இசையமைப்பாளர் சாய் அபயங்கர், டியூட் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பு மற்றும் அவரின் அருமையான திறமையும் மிகவும் சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க: சினிமாவில் 4 ஆண்டுகளைக் கடந்தது டாக்டர் படம்… கொண்டாடும் படக்குழு!

மேலும் இந்த படத்தைத் தொடர்ந்து, தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் AA22xA6 படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இவ்வளவு பெரிய திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பைப் பெற அவர், எவ்வளவு திறமைமிக்கவர் என பாருங்க” என்று அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஒய். ரவி சங்கர் பேசியிருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

டியூட் திரைப்படம் குறித்து சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையமைப்பில் டியூட் படத்தைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 6 படங்களுக்கும் மேல் உருவாகிவருகிறது. சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் மார்ஷல், சிலம்பரசனின் STR49 மற்றும் பென்ஸ் என பல படங்கள் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.