மமிதா பைஜூ கோ கோ வீரராக நடித்த இந்தப் படத்தை பார்த்து இருக்கீங்களா? அப்போ இந்த கோ கோ படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்
Kho Kho Movie: ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ள கோ கோ படம் பற்றி தற்போது பார்க்கலாம்.

ஓடிடியின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்தப் பிறகு பல ஜானர்களில் பல மொழிகளில் உருவாகும் படங்களையும் மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். சிலருக்கு ஃபீல் குட் படங்கள் பிடிக்கும், சிலருக்கு ஆக்ஷன் படங்கள் பிடிக்கும், சிலருக்கு காமெடி படங்களும் சிலருக்கு ஸ்போர்ட்ஸ் படங்களும் பிடிக்கும். இந்த நிலையில் ஓடிடியில் வெளியாகும் படங்களைப் தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அதன்படி ஸ்போர்ஸ் ட்ராமா பாணியில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மமிதா பைஜூ மலையாள சினிமாவில் ஸ்போர்ட்ஸ் ப்ளேயராக நடித்த படம் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி மலையாள சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கோ கோ.
இந்தப் படத்தை இயக்குநர் ராகுல் ரிஜி நாயர் எழுதி இயக்கி இருந்தார். அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் ரஜிஷா விஜயன், மமிதா பைஜு, வெங்கடேஷ் வி.பி., ரஞ்சித் சேகர் நாயர், வெட்டுக்கிளி பிரகாஷ், ராகுல் ரிஜி நாயர், அர்ஜுன் ரஞ்சன், ஸ்ரீஜித் பாபு, ஜியோ பேபி, கீதி சங்கீதா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனமான ஃபர்ஸ்ட் ப்ரிண்ட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
மமிதா பைஜுவின் கோ கோ படத்தின் கதை என்ன?
கோ கோ வீரராக இருக்கும் நடிகை ரஜிஷா விஜயன் இந்தியாவிற்கு விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் சில அரசியல் காரணங்களால் அவரால் இந்தியாவிற்கு விளையாட முடியவில்லை. அதனைத் தொடர்ந்து ஒரு பெண்கள் பள்ளியில் பிடி டீச்சராக வேலையில் சேர்கிறார்.




Also Read… லைஃப்ல நீ ஒரு விசயத்த லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணா… டியூட் படத்தின் ட்ரெய்லர் இதோ!
அதனைத் தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் மமிதா பைஜூவிற்கு கோகோ விளையாட கற்றுக் கொடுக்கிறார். அந்த பள்ளியில் இருந்து பல இடங்களுக்கு சென்று போட்டியில் வெற்றிப் பெறுகிறார்கள். இதில் மமிதா பைஜூ இந்தியா அளவில் விளையாட வேண்டும் என்று ரஜிஷா விஜயன் ஆசைப்படுகிறார். அதனைத் தொடர்ந்து இறுதியில் மமிதா பைஜூ இந்தியாவிற்காக விளையாடினாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… வேட்டுவம் என்ன மாதிரியான படமாக இருக்கும் – இயக்குநர் பா ரஞ்சித் ஓபன் டாக்