Jana Nayagan: அனிருத்தின் பர்த்டே.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘ஜன நாயகன்’ படக்குழு!
Anirudh Birthday Special Poster: தென்னிந்தியாவில் பிரபல இசையமைப்பாளராக கலக்கி வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் தொடர்ந்து பிரம்மாண்ட நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துவருகிறார், இந்நிலையில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கும் இசையமைக்கும் நிலையில், இன்று அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பிரபல இசையமைப்பாளாராக இருந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவரின் இசையமைப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் இசையமைப்பில் தமிழில் உருவாகிவரும் திரைப்படம் தான் ஜன நாயகன் (Jana Nayagan). தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத்தான் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில்தான் ஜன நாயகன் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை என பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்நிலையில் இன்று 2025 அக்டோபர் 16ம் தேதியில் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதத்தில், ஜன நாயகன் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகிவருகிறது. அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், படக்குழு போஸ்டரை மட்டுமே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: புது காம்போ… வெற்றிமாறன் – சிலம்பரசனின் ‘அரசன்’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத் – உறுதி செய்த படக்குழு
அனிருத் ரவிச்சந்தரை வாழ்த்தி ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்:
Team #JanaNayagan wishes, A very Happy Birthday to Rockstar @anirudhofficial 🔥
Keep ruling hearts and charts alike ♥#HappyBirthdayAnirudh#Thalapathy @actorvijay sir #HVinoth @KvnProductions @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 pic.twitter.com/M4qjMkxNWF
— KVN Productions (@KvnProductions) October 16, 2025
தளபதி விஜய்யின் 69வது திரைப்படமாக உருவாகிவருவது ஜன நாயகன். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் நிலையில், கே.வி.என்.ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்தில் முன்னணி நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர்களில் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி, ஸ்ருதி ஹாசன், பாபி தியோல், பிளெஸ்ஸி, வரலட்சுமி சரத்குமார் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது :
இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்தவரும் நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வரும் 2025 தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் கரூர் பிரச்னையின் காரணமாக இப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகாது என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி.. இளம் பெண் குற்றச்சாட்டு!
இந்நிலையில் இந்த தீபாவளிக்கு முதல் சிங்கிள் வெளியாகவும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் படக்குழு அது குறித்து எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் 2025 தீபாவளிக்கு வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.