Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 படம் முதல் மதராஸி படம் வரை… பர்த்டே பாய் அனிருத் ரவிச்சந்தரின் இசைப் பயணம் ஒரு பார்வை!

Music Director Anirudh Ravichander: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் இன்று தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் இசைப்பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

3 படம் முதல் மதராஸி படம் வரை… பர்த்டே பாய் அனிருத் ரவிச்சந்தரின் இசைப் பயணம் ஒரு பார்வை!
அனிருத் ரவிச்சந்தர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Oct 2025 14:03 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 3. இந்தப் படத்தை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்த நிலையில் நடிகர் தனுஷ் நாயகனாகவும் நடிகை ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே அனிருத் ரவிச்சந்தருக்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் வெளியான ஒய் திஸ் கொலவரி பாடல் பான் இந்திய அளவில் ஹிட் அடித்தது. மேலும் பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் ஆல்பத்தை வெகுவாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் தங்களின் படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க வேண்டும் என்று விறுப்பம் தெரிவிக்கத் தொடங்கினர். அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய், விஜய் சேதுபதி, அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பலரின் படங்களுக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பான் இந்திய அளவில் ராக் ஸ்டாராக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத்:

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர் பான் இந்திய மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களிலும் இசையமைத்துள்ளார். இவரின் பாடல்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இவரை அனைவரும் அன்புடன் ராக் ஸ்டார் என்று அழைக்கத் தொடங்கினர்.

இவரது இசையில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமரனத்தைப் பெற்று இருந்தாலும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் 13 ஆண்டுகளாக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர் தற்போது இசை உலகில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் இன்று 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம ஆண்டு தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களின் அப்டேட்

அனிருத் ரவிச்சந்தர் சமீபத்தில் வெலியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Anirudh (@anirudhofficial)

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் AK 64 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்