சீதா ராமம் பட இயக்குநருடன் பிரபாஸின் புதிய படம்.. டியூட் பட மேடையில் டைட்டிலை உளறிய பிரதீப் ரங்கநாதன்!
Pradeep Ranganathan Reveals Prabhas Movie Title: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் டியூட். இந்த படமானது அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதன், பிரபாஸின் புதிய படத்தின் டைட்டிலை தெரிவித்தார்.

லவ் டுடே (Love Today) படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). அந்த படத்தை அவரே இயக்கி, அதில் ஹீரோவாகவும் அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தை அடுத்தாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் டிராகன் (Dragon) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில் இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் புதிய படம்தான் டியூட் (Dude). இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, தற்போது தொடர்ந்து தமிழ் படங்களையும் தயாரித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டியூட் படத்தை அடுத்ததாக இவர்கள் தெலுங்கில் தயாரித்துவரும் பிரம்மாண்ட திரைப்படம் பிரபாஸ் (Prabhas) மற்றும் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) படமாகும். இந்த படத்தில் பிரபாஸ் முன்னணி வேடத்தில் நடிக்க, சீதாராமம் படத்தை இயக்கிய இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கவுள்ளார். இது வரலாற்று கதைக்களத்தில் இப்படமானது உருவாகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் டியூட் பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், அறிவிக்கப்படாத பிரபாஸின் இந்த படத்தின் டைட்டிலை உளறியுள்ளார்.




இதையும் படிங்க: விக்ரம் சார் என்னிடம் சொன்ன விஷயம்… அவரின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன் – மாரி செல்வராஜ் பேச்சு!
பிரபாஸின் புதிய திரைப்படத்தின் டைட்டிலை உளறிய நடிகர் பிரதீப் ரங்கநாதன் :
டியூட் பட நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதன், பிரபாஸின் புதிய படம் பற்றி தெரிவித்திருந்தார். அதில் அவர், ” நவீன் சார் நான் பார்த்ததில் மிகவும் நல்ல தயாரிப்பாளர். மேலும் நான் இந்த விஷயத்தை சொல்லலாமா, இல்லை கூடாதா என தெரியவில்லை. எனக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் ஃபௌஜி (Fauji) என்ற திரைப்படத்தின் சில கிளிப்ஸை காட்டினார்கள். அது நடிகர் பிரபாஸ் சாரின் திரைப்படம்.
இதையும் படிங்க: பாகுபலி தி எபிக் படக்குழு வெளியிட்ட புது அப்டேட் – வைரலாகு எக்ஸ் போஸ்ட்
அந்த படமானது இனிமேல்தான் வரப்போகிறது, படத்தின் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது என்றார். மேலும் தயாரிப்பாளர்களிடம் பிரதீப் ரங்கநாதன், தவறாக சொல்லிவிட்டேனா சார் வெளியில் சொல்லக்கூடாதா?” என பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ள நிலையில், பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்த ஃபௌஜி திரைப்படமானது ராணுவ கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதக் கூறப்படுகிறது.
ஃபௌஜி திரைப்படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் பேசிய வீடியோ
“Mythri Movie makers has shown some clipings from #Prabhas‘s #Fauji Film (Directed by SitaRamam fame Hanu Raghavapudi)🔥. You are going to see soon, what a passionate producers🫡”
– #PradeepRanganathanpic.twitter.com/3782cnuC6W— AmuthaBharathi (@CinemaWithAB) October 13, 2025
தற்போது நடிகர் பிரபாஸின் புதிய திரைப்படத்தின் டைட்டில் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. மேலும் இது குறித்து பிரபாஸின் ரசிகர்கள் சிலர் பிரதீப் ரங்கநாதனை பற்றிய கருத்துக்களையும் தெரிவிக்கின்றனர். “இவ்வளவு பெரிய படத்தின் டைட்டிலை இப்படி உளறிவிட்டாரே” எனவும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.