ஜெயிச்சுடு கபிலா… பைசன் காலமாடன் படத்தின் ட்ரெய்லரைப் புகழ்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
Bison Kaalaamadan Movie Trailer | தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களின் பட்டியலில் இருப்பவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் பைசன் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் புகழ்ந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் அட்டக்கத்தி. இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் பா ரஞ்சித் (Pa Ranjith) இயக்குநராக அறிமுகம் ஆனது போல இந்தப் படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பீட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36 வயதினிலே, இறுதிச் சுற்று, காதலும் கடந்து போகும், மனிதன், இறைவி, கபாலி, கொடி, காலா, பரியேறும் பெருமாள், வடசென்னை, ஏ1, ஜிப்சி, பாரிஸ் ஜெயராஜ், கர்ணன், வட சென்னை, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, மகான், கடைசி விவசாயி, குளு குளு என பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை அளித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
இந்த நிலையில் இறுதியாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தமிழ் சினிமாவில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான ரெட்ரோ படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பைசன் படத்தின் ட்ரெய்லரைப் பாராட்டிய சந்தோஷ் நாராயணன்:
இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு நேற்று 13-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, பைசன் ஒரு சிறந்த விளையாட்டு படமாக இருக்கும். ஜெயிச்சிடு கபிலா என்று தெரிவித்து இருந்தார். அந்தப் பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Great visuals , production values , music and performances in this trailer . #Bison could potentially be a benchmark sports film . Jeichidu kabilaaaa 🔥🔥🔥. @beemji @mari_selvaraj #Dhruv @nivaskprasanna https://t.co/1prH1g4hXr
— Santhosh Narayanan (@Music_Santhosh) October 14, 2025
Also Read… பிக்பாஸில் இந்த வார வீட்டு தல டாஸ்க் இதுவா? வைரலாகும் வீடியோ