Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பைசன் படத்தை தொடர்ந்து அடுத்தது அந்த நடிகரின் படம் தான் – மாரி செல்வராஜ் ஓபன் டாக்

Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் பைசன் காளமாடன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பைசன் படத்தை தொடர்ந்து அடுத்தது அந்த நடிகரின் படம் தான் – மாரி செல்வராஜ் ஓபன் டாக்
மாரி செல்வராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Oct 2025 12:21 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன மாரிசி செல்வராஜ் தொடர்ந்து பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான வாழை படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் காளமாடன் படத்தை இயக்கி உள்ளார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் நாயகியாக நடித்துள்ளார். இவர் முன்னதாக பரியேறும் பெருமாள் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் நடிப்பதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் கேட்டபோது வேற படத்தின் ஷெடியூலில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. ஆனால் பைசனை மிஸ் பண்ணாமல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் என்றும் அனுபமா பரமேசுவரன் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பசுபதி, லால் என பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் நாளை 13-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பைசன் படத்தை தொடர்ந்து அடுத்தப் படம் தனுஷ் உடன் தான்:

இந்தப் பைசன் காளமாடன் என்ற படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தற்போது பிசியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் படத்தை தான் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் படம் ஒரு ஹிஸ்டாரிக்கள் ஃபிலிமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Also Read… எனக்கு அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை உள்ளது – நடிகர் பிரதீப் ரங்கநாதன்

இயக்குநர் மாரி செல்வராஜ் சொன்ன விசயம்:

Also Read… அவர் தேசிய விருது வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் – இயக்குநர் அட்லி