பிரித்விராஜ் – பார்வதி நடிப்பில் ஒரு அழகான காதல் கதை… என்னு நின்டே மொய்தீன் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Ennu Ninte Moideen: மலையாள சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் என்னு நின்டே மொய்தீன். உண்மை கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran) நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் என்னு நின்டே மொய்தீன். கடந்த 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த என்னு நின்டே மொய்தீன் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.எஸ்.விமல் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவானதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் பிரித்விராஜிற்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நாயகியகா நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பார்வதி திருவோத்து உடன் இணைந்து நடிகர்கள் பாலா, டொவினோ தாமஸ், சாய்குமார், சசி குமார், லீனா, சுதீர் கரமன, சிவாஜி குருவாயூர், சுதீஷ், கலாரஞ்சினி, சுரபி லட்சுமி, இந்திரன், டிஸ்னி ஜேம்ஸ், கோழிக்கோடு நாராயணன் நாயர், மஜீத், ஜார்ஜ் தரகன் கே.ஜே. பாலாஜி சர்மா, விஜயன் கரந்தூர், கிருஷ்ண நம்பூதிரி, ஜெயசங்கர் கரிமுட்டம், அனீஷ் ஜி. மேனன், நந்தன் உன்னி, எமின் சல்மான், மாஸ்டர் ரோஷன், சிஜா ரோஸ், தேவி அஜித், ரோஸ்லின், சினேகா ராஜ், சாருதா பைஜு, ஜெயா நௌஷாத், சுவாதி நௌஷாத்,
ஷில்பா ராஜ், வைகா ரோஜா, தீபிகா மோகன், கோழிக்கோடு சாரதா, கோழிக்கோடு ரமாதேவி, ப்ரீத்தா பிரதீப், ஜிஜா சுரேந்திரன், நிலா நௌஷாத், பத்ரி கிருஷ்ணா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
Also Read… பிக்பாஸில் பார்வதியால் கடுப்பான கனி – வைரலாகும் வீடியோ!




என்னு நின்டே மொய்தீன் படத்தின் கதை என்ன?
இந்துவாக இருக்கும் நடிகை பார்வதி திருவோத்து முஸ்லிமாக இருக்கும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இருவரும் காதலிப்பார்கள். இவர்கள் இருவரின் காதலுக்கும் வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில் இவர்கள் இருவரும் ஊரைவிட்டு சென்றுவிட முடிவு செய்கிறார்கள். இந்த நிலையில் படகில் சென்றுகொண்டிருந்த போது பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் இடன் இருந்தவர்கள் ஒரு சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அதில் தன்னுடன் இருந்தவர்களை காப்பாற்றிய பிரித்விராஜ் சுகுமாரன் உயிரிழந்துவிடுகிறார். இந்த இழப்பால் பாதிக்கப்பட்ட பார்வதி தனது குடும்பத்தை விட்டுவிட்டு பிரித்விராஜின் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறார். இந்தப் படம் பார்த்த ரசிகர்கள் பலர் தங்களை மிகவும் பாதித்த காதல் படம் இது என்று தெரிவித்து இரிந்தனர். இந்தப் படம் தர்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… சூர்யா சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் – மமிதா பைஜூ