Aaryan: விஷ்ணு விஷாலின் அதிரடி க்ரைம் திரில்லர்… ஆர்யன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!
Aaryan Movie First Single: பிரபல நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் இந்த 2025 அக்டோபர் மாதத்தில் வெளியாக காத்திருக்கும் அதிரடி திரில்லர் படம் ஆர்யன். இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் , நடிகராகவும் இருந்து வருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி (Oho Enthan Baby). இந்த படத்தில் முன்னணி ஹீரோவாக விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா (Rudra) நடித்திருந்தார். இதில் சிறப்பு வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தை விஷ்ணு விஷால்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக விஷ்ணு விஷாலின் தயாரிப்பிலும் மற்றும் முன்னணி நடிப்பிலும் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் ஆர்யன் (Aaryan). இந்த படத்தை இயக்குநர் பிரவீன் கே (Praveen K) இயக்க, அவருடன் இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இணைந்து இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இந்த படமானது 2025 அக்டோபர் 31 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்திலிருந்து “Im The Guy” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பூஜா ஹெக்டேவின் பர்த்டே.. கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ஜன நாயகன் படக்குழு!
நடிகர் விஷ்ணு விஷால் ஆர்யன் படக்குழு வெளியிட்ட முதல் பாடல் தொடர்பான பதிவு :
Turn up the volume, turn down the calm 🔥#ImTheGuy – First single from #Aaryan out now.
Tamil ▶️ https://t.co/BWfPwa0xXg
Telugu ▶️ https://t.co/o4cilxu3crComing to cinemas worldwide on the 31st of October!@TheVishnuVishal @VVStudioz @adamworx @selvaraghavan… pic.twitter.com/KkPTJ5Mtzq
— Vishnu Vishal Studioz (@VVStudioz) October 13, 2025
ஆர்யன் திரைப்படத்தின் கதைக்களம்
இந்த ஆர்யன் படமானது க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் நடிகர் விஷ்ணு விஷால், இன்வெஸ்டிகேஷன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராட்சசன் திரைப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படமாக இந்த ஆர்யன் கூறப்படுகிறது. இதை விஷ்ணு விஷாலுடன் நடிகர்கள் செல்வராகவன், வாணி போஜன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி கபூர் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் முக்கிய வில்லனாக நடிகர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த், தனுஷ் வரிசையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் – நாகர்ஜுனா சொன்ன விசயம்
இந்த் படமானது அசத்த க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், வரும் 2025 அக்டோபர் 31ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மேலும் டிரெய்லர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.