மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்த ஆயிஷா… வைரலாகும் வீடியோ
Bigg Boss telugu Season 9: தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ஆயிஷா. இவர் முன்னதாக பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதுவரை 8 சீசன்கள் ரசிகர்களிடையே வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நிலையில் தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்கி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி தமிழில் முதல் சீசன் தொடங்கி தொடர்ந்து 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் கடந்த வாரம் 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ளது.
இதில் முதல் வார எவிக்ஷனில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்ட நிலையில் மற்றப் போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் இன்றி போட்டியாளராக கலந்துகொள்பவர்களுக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பது போல தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்த ஆயிஷா:
அதன்படி தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானவராக இருந்த நடிகை ஆயிஷா தமிழ் பிக்பாஸில் கடந்த 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றியாளராக இல்லை என்றாலும் ரசிகர்களிடையே தனக்கான வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்,
இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் பிரபலமானவராக இருந்து வந்த நிலையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… அதர்வாவின் இதயம் முரளி படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எங்கு தெரியுமா?
இந்த நிகழ்ச்சியில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக திரையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி தோன்றி அவருக்கு எவிக்ஷன் நாமினேஷன் பவர் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் நடிகை ஆயிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… ரெட்டை கதிரே… சூர்யாவின் மாற்றான் படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது