Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பராசக்தி படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? இணையத்தில் வைரலகும் வீடியோ!

Parasakthi Movie: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பராசக்தி படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? இணையத்தில் வைரலகும் வீடியோ!
பராசக்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Oct 2025 13:38 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. அதிரடி ஆக்‌ஷன் பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஏ.அர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தை சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் இயக்கி உள்ளதால் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்து இருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை ரசிகர்களிடையே பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு முன்பு அறிவித்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்துள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து அதர்வா, ராணா, ஸ்ரீ லீலா, அப்பாஸ், குளப்புள்ளி லீலா, தேவ் ராம்நாத், பிருத்வி ராஜன், குரு சோமசுந்தரம், பேசில் ஜோசப், ஷாஜி சென், பாப்ரி கோஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பராசக்தி படத்தின் ஷூட்டிங் முடிந்ததா?

அதன்படி பராசக்தி படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கலிடையே வைரலாகி வந்தது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக இணையத்தில் வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் துருவ் விக்ரம் – வைரலாகும் வீடியோ

இணையத்தில் கவனம் பெறும் பராசக்தி படக்குழுவின் வீடியோ:

Also Read… ஃபயர் மோடில் விஜய் சேதுபதி… பதட்டத்தில் போட்டியாளர்கள் – வைரலாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீடியோ!