தங்கலான் படத்திற்கு பிறகு விக்ரமிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை – இயக்குநர் பா.ரஞ்சித்
Director Pa Ranjith: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பா ரஞ்சித். இவர் சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜின் பைசன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் விக்ரம் குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் பா ரஞ்சித் (Director Pa Ranjith). இவர் கடந்த 2012-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நாயகனாக நடித்ததானலே நடிகர் தினேஷை ரசிகர்கள் அட்டக்கத்தி தினேஷ் என்று அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படங்களில் இந்த முதல் படம் மட்டுமே மிகவும் ஜாலியான கதையம்சத்தை கொண்டிருக்கும். அதனைத் தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், கபாலி, காலா, சார்ப்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தங்கலான் ஆகிய படங்கள் அனைத்தும் தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்னைகளை மையமாக வைத்து வெளியாகி இருந்தது குறிப்பிடத்ஹ்டக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் பா ரஞ்சித். அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகம் ஆன பறியேறும் பெருமாள் படத்தை இயக்குநர் பா ரஞ்சித் தனது நீலம் புரடெக்ஷன் சார்பாக தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்களை தயாரிக்கும் பா ரஞ்சித் தற்போது பைசன் படத்தையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பைசன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பா ரஞ்சித் தங்கலான் படம் குறித்தும் விக்ரம் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தங்கலானுக்கு பிறகு விக்ரமிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை:
அதன்படி இயக்குநர் பா ரஞ்சித் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, தங்கலான் படத்திற்கு பிறகு நடிகர் சியான் விக்ரமுக்கு இந்த சமூகம் சரியான அங்கீகாரத்தை வழங்கவில்லை. அந்தப் படத்தின் எனது திரைப்பட மொழி ரசிகர்களை சென்றடையாமல் இருந்திருக்கலாம், ஆனால் சியான் விக்ரமின் நடிப்பு அசாதாரணமானது. அங்கீகாரத்திற்காக அவர் தன்னை ஒரு போர் இயந்திரமாக வடிவமைத்துக் கொண்டார் என்று அவர் பேசியிருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்
இணையத்தில் கவனம் பெறும் பா ரஞ்சித்தின் பேச்சு:
After #Thangalaan, the society didn’t give proper recognition for #ChiyaanVikram.. My film language might not have reached the audience but his Performance was extraordinary..👏 He shaped himself as war machine for the recognition..❣️
– #PaRanjith pic.twitter.com/ExHeEIlszo— Laxmi Kanth (@iammoviebuff007) October 12, 2025
Also Read… விமல் நடிப்பில் உருவாகும் மகாசேனா படம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூரி