Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mari Selvaraj: விக்ரம் சார் என்னிடம் சொன்ன விஷயம்… அவரின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன் – மாரி செல்வராஜ் பேச்சு!

Mari Selvaraj About Chiyaan Vikram: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் பைசன். இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய மாரி செவ்ராஜ், நடிகர் சியான் விக்ரமின் நம்பிக்கையை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.

Mari Selvaraj: விக்ரம் சார் என்னிடம் சொன்ன விஷயம்… அவரின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன் – மாரி செல்வராஜ் பேச்சு!
சியான் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 14 Oct 2025 16:08 PM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான “பரியேறும் பெருமாள்” (Pariyerum Perumal) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவரின் முன்னணி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இதுவரை சுமார் 4 படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது. வெளியான இந்த 4 படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் 5வது உருவாகியுள்ள திரைப்படம்தான் பைசன் (Bison). இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க, நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran)  நடித்துள்ளார்.

இந்த படமானது கபடி கதைக்களத்தை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் நிகழ்ச்சியின்போது பேசிய மாரி செல்வராஜ், நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) நம்பிக்கையை காப்பாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாகுபலி தி எபிக் படக்குழு வெளியிட்ட புது அப்டேட் – வைரலாகு எக்ஸ் போஸ்ட்

சியான் விக்ரம் குறித்து மாரி செல்வராஜ் பேசிய விஷயம்

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய மாரி செல்வராஜ், ‘ இந்த மேடையில் நான் சொல்ல விரும்பும் விஷயம் ஒன்று இருக்கிறது. சியான் விக்ரம் சார் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஆனால் சொல்லவேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இந்த் பைசன் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கை தொடங்கி வைக்கும்போது என்னிடம் ஒன்று கூறினார். “துருவை உனது பையனை போல நினைத்துக்கொள் மாரி, உன்னை நம்பித்தான் அவனை விட்டுட்டு போறேன். உன்னை முழுவதுமாக நம்புகிறேன்” என விக்ரம் சார் கூறினார்.

இதையும் படிங்க: டீசல் படம் அவர்களின் பிரதிபலிப்புதான்.. ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த விஷயம்!

நான் அவரின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன் என நினைக்கிறேன். விக்ரம் சார் நீங்கள் நம்பியது மாதிரி, நீங்கள் எதிர்பார்த்த மாதிரி, பைசன் திரைப்படம் இருக்கும். நான் இந்த வெற்றியை உங்கள் நம்பிக்கைக்கு சமர்ப்பிக்கிறேன்” என இயக்குநர் மாரி செல்வராஜ் மேடையில் வெளிப்படையாக பேசியிருந்தார்.

மாரி செல்வராஜ் பேசியது தொடர்பாக வெளியான வீடியோ பதிவு

இந்த பைசன் திரைப்படமானது 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழி படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தத்க்கது. கபடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மக்களிடையே வரவேற்பை பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.