உன் கைய உடைச்சாலும், கால உடைச்சாலும் நீ ஓடிகிட்டே இரு – பைசன் காளமாடன் ட்ரெய்லர் இதோ
Bison Kaalaamadan Movie Trailer | தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது பைசன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பட்டியளில் இருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj). தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்னைகளை மையமாக வைத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படங்கள் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது இயக்கி உள்ள படம் பைசன் காளமாடன். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் ஒரு கபடி வீரராக நடித்துள்ளார். இது ஒரு உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று மாரி செல்வராஜ் தெரிவித்து இருந்தார்.
இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பசுபதி, லால், ஹரி கிருஷ்ணன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், கலையரசன், அருவி மதானந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.




பைசன் காளமாடன் ட்ரெய்லர் கூறுவது என்ன?
கபடி மீது தீவிர காதல் கொண்ட நபராக இருக்கிறார் துருவ் விக்ரம். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே கபடியில் தீவிர ஆர்வம் காட்டி வரும் துருவ் விக்ரமின் தந்தை பசுபதிக்கு பயம் அதிகமாக இருக்கிறது. காரணம் கபடி விளையாடுவதால் தனது மகன் சாதிப் பிரச்சனையில் சிக்கிவிடுவார் என்று. இந்த சூழல்களை எல்லாம் கடந்து எல்லா பிரச்னைகளுக்கு மத்தியில் அவர் எப்படி கபடியில் சாதிக்கிறார் என்பதே படத்தின் கதையாக ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.
Also Read… பிக்பாஸில் பார்வதியால் கடுப்பான கனி – வைரலாகும் வீடியோ!
பைசன் காளமாடன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
In a Land of Chaos, rises a Believer! #BisonKaalamaadan 🦬 காளமாடன் வருகை
Trailer Out Now ▶️ https://t.co/N37qnuLm364 Days to go until his last Raid 🔥#BisonKaalamaadanFromDiwali #BisonKaalamaadanOnOct17 🎆 pic.twitter.com/FZvnoKfiAa
— Applause Entertainment (@ApplauseSocial) October 13, 2025
Also Read… சூர்யா சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் – மமிதா பைஜூ