Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘நீங்க வாட்டர்மெலானா.. இல்ல முந்திரிக்கொட்டையா?’ திவாகரை கலாய்த்த விஜய் சேதுபதி.. வைரலாகும் ப்ரோமோ!

Vijay Sethupathi Bigg Boss Promo: தமிழ் மக்களுடைய மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக்பாஸ். 2025 ஆண்டிற்கான பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. வார இறுதியான இன்று விஜய் சேதுபதியின் சந்திப்பு இருக்கும் நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகரை, விஜய் சேதுபதி கிண்டதால் செய்த ப்ரோமோ வைரல்.

‘நீங்க வாட்டர்மெலானா.. இல்ல முந்திரிக்கொட்டையா?’ திவாகரை கலாய்த்த விஜய் சேதுபதி.. வைரலாகும் ப்ரோமோ!
வாட்டர்மெலன் திவாகர் மற்றும் விஜய் சேதுபதி
Barath Murugan
Barath Murugan | Published: 11 Oct 2025 20:42 PM IST

தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 5ம் தேதியுடன் தொடங்கிய நிலையில், இன்றுடன் 7வது நாளாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று 2025 அக்டோபர் 11ம் தேதி வார இறுதி நிகழ்ச்சி என்ற நிலையில், நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இன்று எந்த போட்டியாளர் வெளியேறுகிறார்?, மற்றும் எந்த போட்டியாளரை விஜய் சேதுபதி தாக்குகிறார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில், இன்று வெளியான ப்ரோமோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இன்று வெளியான 4வது ப்ரோமோ வீடியோவில், வாட்டர்மெலான் ஸ்டார் திவாகரை (Watermelon Star Divakar), தொகுப்பாளர் விஜய் சேதுபதி கிண்டல் செய்வதுப் போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், விஜய் சேதுபதி, திவாகரிடம், “திவாகர் நீங்க வாட்டர்மெலானா? இலை முந்திரிக்கொட்டையா சார் நீங்க?. என்னனு சொல்லுங்க என போட்டியாளர் திவாகரை நடிகர் விஜய் சேதுபதி சிறப்பாக கேலி செய்திருப்பார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள், அவரின் தொகுப்பாளர் திறமையை புகழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஃபயர் மோடில் விஜய் சேதுபதி… பதட்டத்தில் போட்டியாளர்கள் – வைரலாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீடியோ!

இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் சீசன் 9 தமிழில் முதல் வார இறுதி ப்ரோமோ :

பிக் பாஸ் வீட்டிலிருந்து 2வது வெளியேரும் நபர் யார் :

இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக சுமார் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் அரோரா சின்க்ளேர், திவாகர், கலையரசன், கம்ருதின், நந்தினி, விஜே பார்வதி, ரம்யா ஜோ, பிரவீன் ராஜ், இயக்குனர் பிரவீன் காந்தி உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த முதல் வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேறவுள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையத்தில், சில பிரச்சனையின் காரணமாக நந்தினி இந்த போட்டியில் இருந்து பாதியிலே வெளியேறியுள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை விட்டு தீடீரென வெளியேறிய போட்டியாளர் நந்தினி… காரணம் என்ன?

மேலும் இந்த முதல் வார ஏவிக்ஷனில் யார் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 2025 அக்டோபர் 12ம் தேதியில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 9 மாற்றங்கள் :

மற்ற சீசன்களை ஒப்பிடும்போது, இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் இந்த சீஸனின் தண்ணீர் சிக்கனம், உணவு சிக்கனம், தலைவருக்கான தனி அறை மற்றும் டீலக்ஸ் அறை என பல்வேறு மாற்றங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.