Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Harish Kalyan: டீசல் படம் அவர்களின் பிரதிபலிப்புதான்.. ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த விஷயம்!

Harish Kalyan About Diesel Movie: தமிழில் வளர்ந்துவரும் இளம் நடிகராக இருந்துவருபவர் ஹரிஷ் கல்யாண். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் டீசல். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இப்படம் எதை பிரதிபலிக்கிறது என்பது பற்றி ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Harish Kalyan: டீசல் படம் அவர்களின் பிரதிபலிப்புதான்.. ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த விஷயம்!
ஹரிஷ் கல்யாண்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Oct 2025 23:37 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல இளம் நாயகனாக இருந்து வருபவர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது லப்பர் பந்து (Labber Pandhu). இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக, இந்த 2025ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் டீசல் (Diesel). இந்த படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள நிலையில், தி தேர்ட் ஐ (The Third Eye) என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்திருக்கிறது. இந்த டீசல் படமானது கச்சா எண்ணெய் கடத்தல் தொடர்பாக உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஹரிஷ் கல்யாண் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி (Athulya Ravi) நடித்திருக்கிறார்.

இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஹரிஷ் கல்யாண், டீசல் படமானது எதை பிரதிபலிக்கிறது என்பது தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: என் அடுத்த படம் ‘லவ் டுடே 2’? பிரதீப் ரங்கநாதன் விளக்கம்!

டீசல் திரைப்படம் பற்றி ஹரிஷ் கல்யாண் தெரிவித்த விஷயம்

நடிகர் ஹரிஷ் கல்யாண், டீசல் திரைப்படமானது ஒரு மீனவரின் ஆன்மா , உணர்வு மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கிறது என ஓபனாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது, தெரிந்துகொண்ட பல்வேறு கஷ்டங்கள் மற்றும் அனுபவங்கள் பற்றியும் ஹரிஷ் கல்யாண தெரிவித்திருந்தார்.

டீசல் திரைப்படத்தின் ட்ரெய்லர் தொடர்பாக ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த டீசல் படமானது ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் ஹரிஷ் கல்யாண் அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், இதுவரை தான் நடித்ததில் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படம் இந்த டீசல் திரைப்படம்தான் என ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: டியூட் பட டைட்டிலுக்கு காரணம் .. இயக்குநர் கீர்த்திஸ்வரன் சொன்ன சீக்ரெட்!

இது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னே பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டை கொடுத்திருந்தது. அதிலும் பீர் என்ற பாடலானது இன்றுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.