Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இட்லி கடை படத்திலிருந்து வெளியானது எஞ்சாமி தந்தானே வீடியோ பாடல்

Enjaami Thandhaane Video Song : நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இட்லி கடை. இந்த இட்லி கடை படத்தில் வெளியான எஞ்சாமி தந்தானே என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இட்லி கடை படத்திலிருந்து வெளியானது எஞ்சாமி தந்தானே வீடியோ பாடல்
எஞ்சாமி தந்தானேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2025 19:00 PM IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகிறார் தனுஷ் (Actor Dhanush). இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது நடிப்பில் வெளியான 52-வது படமான இட்லி கடை படத்தை அவரே எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு தனது சிறுவயதில் கிராமத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அந்த கிராமத்தில் வாழ்ந்த சில மனிதர்களின் கதையையும் இணைந்து இந்தப் படத்தை இயக்கி உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் படம் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கிராமத்துப் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, சமுத்திரகணி, பார்த்திபன், இளவரசு, வடிவுக்கரசி, கீதா கைலாசம், ஆடுகளம் நரேன், பிரகிடா சாகா, இந்துமதி மணிகண்டன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

வெளியானது எஞ்சாமி தந்தானே வீடியோ பாடல்:

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அதன்படி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் வெளியான எஞ்சாமி தந்தானே என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஜெயிச்சுடு கபிலா… பைசன் காலமாடன் படத்தின் ட்ரெய்லரைப் புகழ்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி – நடிகர் மணிகண்டன்