முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி – நடிகர் மணிகண்டன்
Actor Manikandan: தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி சமீமத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற நடிகர் மணிகண்டன் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது கவனத்தைப் பெற்று வருகின்றது.

தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் மணிகண்டன் (Actor Manikandan). தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகனாக நடிகர் மணிகண்டன் வலம் வருகிறார். அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு முதல் சினிமாவில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர் மணிகண்டன் ஏலே என்ற படத்தில் இருந்து முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஜெய் பீம், குட் நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகியப் படங்களில் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் மணிகண்டன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான குடும்பஸ்தன் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒரு மிடில் கிளாஸ் இளைஞர் காதல் திருமணம் செய்துக்கொண்ட பிறகு எந்த மாதிரியான பிரச்னைகள் எல்லாம் வாழ்க்கையில் சந்திக்கிறான் என்பதே படத்தின் கதை. மிகவும் எதார்த்தமாக எடுக்கப்பட்ட இந்த கதை மணிகண்டனின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.




கலைமாமணி விருதிற்கு நன்றி தெரிவித்த மணிகண்டன்:
கடந்த 2023-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளின் பட்டியலை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அந்த விருது வென்றவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை மணிகண்டன் வென்றார். அவருக்கு விருது வழங்கிய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நடிகர் மணிகண்டன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… நிறைவடைந்தது அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் போஸ்ட்
நடிகர் மணிகண்டன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Sincere Thanks to Honourable Chief Minister, Honourable Deputy Chief Minister, Jurys of Iyal isai Nadaga Mandram ❤️🙏
Heartful Thanks to everyone for unconditional love🙏❤️ pic.twitter.com/jSxJwsIiOK
— Manikandan (@Manikabali87) October 14, 2025
Also Read… வசூலில் ரூபாய் 300 கோடியை கடந்தது லோகா சாப்டர் 1 சந்திரா – படக்குழு வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு