Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வசூலில் ரூபாய் 300 கோடியை கடந்தது லோகா சாப்டர் 1 சந்திரா – படக்குழு வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

Loka Chapter 1 Chandra Movie: நடிகர்கள் கல்யாணி பிரயதர்ஷன் மற்றும் நஸ்லேன் நடிப்பில் மலையாள சினிமாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியானது லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படம் தற்போது உலக அளவில் ரூபாய் 300 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வசூலில் ரூபாய் 300 கோடியை கடந்தது லோகா சாப்டர் 1 சந்திரா – படக்குழு வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
லோகா சாப்டர் 1 சந்திரா Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Oct 2025 22:06 PM IST

மலையாள சினிமாவில் சூப்பர் ஹீரோ படமாக வெளியாகி உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Actress Kalyani Priyadharshan) நாயகியாக நடித்து இருந்த நிலையில் நடிகர் நஸ்லேன் நாயகனாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அருண் குரியன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, சந்து சலிம் குமார், ஜெயின் ஆண்ட்ரூ, ரகுநாத் பலேரி, நிஷாந்த் சாகர், சரத் சபா, சாம் மோகன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் துல்கர் சல்மான், சன்னி வேயோன், டொவினோ தாமஸ், சௌபின் ஷாகிர் என பலர் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை இயக்குநர் டாம்னிக் அருண் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் இந்தப் படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் போதே மொத்தம் 5 பாகங்களாக இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு முன்பே அறிவித்து இருந்தது. அதன்படி இரண்டாம் பாகத்தில் நடிகர் டொவினோ தாமஸ் தான் நாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது.

வசூலில் ரூபாய் 300 கோடியை கடந்தது லோகா சாப்டர் 1 சந்திரா:

இந்தப் படத்தின் மொத்த வசூல் ரூபாய் 30 கோடி என்று படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் தெரிவித்து இருந்தார். இது மலையாள சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராக படம் என்றும் இது வெற்றியடையவில்லை என்றால் என்ன செய்வது என்று பயந்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

ஆனால் படம் எதிர்பாராத விதமாக 10 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது. இந்திய சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் வசூல் படக்குழுவை மிகுந்த வசூலை ஆழ்த்தியுள்ளது.

Also Read… நடிகை பூஜா ஹெக்டே பிறந்த நாள் – சிறப்பு போஸ்டரை வெளியிட்ட DQ41 படக்குழு

லோகா சாப்டர் 1 சந்திரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்த ஆயிஷா… வைரலாகும் வீடியோ