நிறைவடைந்தது அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் போஸ்ட்
Abhishan Jeevindh: தமிழ் சினிமாவில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இவர் தற்போது நாயகனாக அறிமுகம் ஆகியுள்ள படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth). இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், நடிகர் நானி, இயக்குநர் ராஜமௌலி என பிரபலங்கள் பலரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டினர். இந்தப் படத்தில் நடிகர்கள் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், பக்ஸ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இலங்கையில் இருந்து கடன் பிரச்னை காரணமாக தமிழகத்திற்கு கடல் வழியாக வரும் குடும்பம் எப்படி தமிழ் நாட்டில் தங்களது வாழ்க்கையை தொடங்கி வாழ்கிறார்கள். அவர்களுக்கு வரும் பிரச்னைகளை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது படத்தின் கதை. மிகவும் சீரியசான கதையை காமெடியாக ரசிகர்களிடையே கொண்டு சேர்த்ததால் இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஓவர்:
டூரிஸ்ட் ஃபேமில் படத்திற்கு பிறகு இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அடுத்ததாக என்ன படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் படத்தை இயக்குவது விட்டுவிட்டு நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்தப் படத்தை தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து உள்ள நிலையில் நடிகை அனஸ்வரா ராஜன் நடிகர் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் மதன் இயக்கி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தங்கலான் படத்திற்கு பிறகு விக்ரமிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை – இயக்குநர் பா.ரஞ்சித்
சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s a wrap! The shooting of MRP Entertainment – Zion Films #ProductionNo4 has successfully been completed! ❤️🙏🏻😊👍🏻😇@Abishanjeevinth @AnaswaraRajan_ #Madhan @kshreyaas @RSeanRoldan @MRP_ENTERTAIN @mageshraj @Zionfilmsoff @Editor_Sk_ @rajkamalart @proyuvraaj pic.twitter.com/cjTnC9iy2F
— soundarya rajnikanth (@soundaryaarajni) October 13, 2025
Also Read… ரஜினிகாந்த், தனுஷ் வரிசையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் – நாகர்ஜுனா சொன்ன விசயம்