தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களின் அப்டேட்
Big Budget Movie Update : தமிழ் சினிமாவில் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. மாறாக இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்கள் தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது .

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் (Tamil Cinema) தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் முன்னணி நடிகரகளாக வலம் வருபவர்களின் படங்கள் நிச்சயமாக வெளியாகும். ஆனால் இந்த 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. மாறாக தமிழ் சினிமாவில் இரண்டாம் கட்ட நாயகனாக வலம் வரும் நாயகன்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் படம், இயக்குநர் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் படம், அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் ஆகிய படங்கள் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
அதன்படி இந்த மூன்று முக்கியப் படங்களும் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி இந்தப் படங்களின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், சூர்யா, சிலம்பரசன், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைப்பெற்று வருகின்றது.




முன்னணி நடிகர்களின் படங்களின் அப்டேட்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் அவர்களின் படங்களின் அப்டேட்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்படி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படத்தின் இருந்து முதல் சிங்கிள் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள அரசன் படத்தின் டீசர் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது. மேலும் இதனுடன் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் வீடியோ வெளியேற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… ஜன நாயகன் படத்தின் விநியோக உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம் – வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
This Diwali, even though big stars don’t have film releases, updates from their upcoming movies are on the way! 🎉
The first single from #Suriya’s “#Karuppu”, and the first song from #ThalapathyVijay ‘s“#JanaNayagan” will be released soon.
The teaser of “#Arasan” will be… pic.twitter.com/tVFpAtnXDq
— Movie Tamil (@_MovieTamil) October 14, 2025
Also Read… டியூட் படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போட் தொடங்குது தெரியுமா? அப்டேட் கொடுத்த படக்குழு